நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர வேண்டும் என்றால் அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய செல்வங்கள் நமக்கு வேண்டும். அப்படிப்பட்ட செல்வங்களை வாரி வழங்கக்கூடிய தெய்வங்களை அந்த தெய்வங்களுக்குரிய விசேஷமான நாட்களில் விசேஷமான முறையில் பூஜை செய்யும் பொழுது அந்த தெய்வங்களின் அருளால் நமக்கு தேவையான அனைத்து செல்வங்களையும் நம்மால் பெற முடியும். அந்த வகையில் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சஷ்டி திதி அன்று செய்ய வேண்டிய முருக வழிபாட்டையும் முருகனுக்குரிய மந்திரத்தையும் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
செல்வ வளத்தை அதிகரிக்க மந்திரம்
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான சிறப்பான வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை பின்பற்றி நாம் வழிபாடு செய்யும்பொழுது நாம் நினைத்தது நமக்கு நடக்கும் என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக முருகப்பெருமானின் அருளால் நமக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி அனைத்து விதமான செல்வங்களையும் பெறுவதற்கு சூட்சமமான ஒரு மந்திர வழிபாட்டு முறை இருக்கிறது. அந்த மந்திர வழிபாட்டு முறையை செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் சஷ்டி திதியில் கூறும் பொழுது நாம் எதிர்பாராத அளவிற்கு அனைத்து விதமான செல்வங்களையும் நம்மால் பெற முடியும்.
ஜூலை மாதம் ஒன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:54 வரை சஷ்டி திதி இருக்கிறது. அதனால் இந்த வழிபாட்டை நாம் செவ்வாய்க்கிழமை காலையிலேயே செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக காலை 6 மணியிலிருந்து 7:00 மணிக்குள் வரக்கூடிய செவ்வாய் ஹோரையில் செய்யும்போது அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக 6 அகல்விளக்கில் நெய் தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த தீபங்களுக்கு முன்பாக அமர்ந்து கொண்டு முருகப் பெருமானின் சக்கோண மந்திரம் என்று கூறக்கூடிய சரவணபவ மந்திரத்தில் இருந்து உருவான ஒரு மந்திரத்தை தான் நாம் கூற போகிறோம். இந்த மந்திரத்தை 111 முறை கூற வேண்டும். இயன்றவர்கள் ஒரு பேப்பரில் சிவப்பு நிற பேனாவை பயன்படுத்தி 111 முறை இதே மந்திரத்தை எழுதவும் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் முருகப்பெருமானின் அருளால் அனைத்து விதமான செல்வங்களையும் நம்மால் பெற முடியும். இந்த மந்திர உச்சாடலை செய்யும் பொழுது முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். எந்தவித நெய்வேத்தியமும் இல்லை என்பவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரையாவது வைக்க வேண்டும். இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டு நிறைவு செய்துவிட்டு நெய்வேத்தியமாக வைத்த பொருட்களை பிரசாதமாக வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும்.
மந்திரம்
“ஓம் ரஹணபவச”
இதையும் படிக்கலாமே: ஆனி குமார சஷ்டி
முருகப் பெருமானுக்குரிய அற்புதமான மந்திரமான சரவணபவ மந்திரத்தில் இருந்து உருவான இந்த மந்திரத்தை முழுமனதோடு செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் சஷ்டி திதி அன்று கூறுபவர்களுக்கு அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களும் முருகப் பெருமானின் அருளால் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.