உங்கள் வீட்டிற்கு பின்புறம் இந்த செடி இருந்தால் செல்வ வரவை தடை செய்யும்! அதை முதலில் பிடுங்கி வீசி விடுங்கள். ஆபத்தை கொடுக்கும் செடி என்ன செடி?

- Advertisement -

நம் வீடு மட்டுமல்லாமல், நம் வீட்டை சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயமும் நம்முடைய செல்வ வரவை நிர்ணயிக்கிறது. வீட்டில் துஷ்ட சக்திகள் இருந்தால் நம்மிடம் சுறுசுறுப்பும் அற்றுப் போகும். இதனால் நம்முடைய சிந்தனை பாதித்து, வருமானத்தில் தடைகள் ஏற்படும். தெளிவான சிந்தனையும், சுறுசுறுப்பான ஆரோக்கியமும் இருந்தால் தான் நம்மால் பணத்தை எளிதாக ஈட்டி விட முடியும். நம் வீட்டிற்கு பின்புறம் இந்த செடி, கொடிகள் இருந்தால் நம் செல்வ வரவை அது தடை செய்யும் என்கிறது சாஸ்திரம். அப்படியான செடிகள் என்னென்ன? என்கிற தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

karunthulasi2

எல்லாம் செடி வகைகளுக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல்களை வெளிப்படுத்தும் தன்மை உண்டு. துளசி செடியில் தெய்வீக ஆற்றல் நிறைந்து உள்ளதால் தான் அதனை தெய்வீக செடியாக போற்றி பாதுகாக்கிறோம். எல்லாம் செடியையும் மஞ்சள், குங்குமம் வைத்து நாம் சுற்றி வலம் வருவது இல்லை. துளசிக்கு அத்தகைய மகத்துவங்கள் கொடுக்கப்பட அதன் புராணங்களும், அது வெளியிடும் ஆற்றலும் காரணமாக அமைந்து இருக்கிறது.

- Advertisement -

அதே போல நம் வீட்டை சுற்றிலும் இருக்கும் தேவையற்ற வாடிய செடிகள், நம் செல்வ வரவை தடை செய்யும் ஆற்றலைப் பெற்றுள்ளது. வாடிய, காய்ந்து செடிகளை வீட்டிற்கு பின்புறம் எப்பொழுதும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காலியிடங்களில் அல்லது கொஞ்சம் இடம் இருந்தால் கூட வெகுவாக மளமளவென தேவையற்ற களைகள் முளைக்கத் தொடங்கிவிடும்.

dry-plants

மழைக் காலத்தில் தொடங்கிய இந்த செடிகள் வெயில் அடிக்கும் பொழுது காய்ந்து வதங்கிப் போய் விடும். அதற்கு யாரும் விதை போடுவதில்லை, தண்ணீர் ஊற்றுவதுமில்லை. தானாகவே முளைத்து, தானாகவே மடியும் இந்த வகையான செடிகளை சற்று எச்சரிக்கையாக பார்ப்பது நல்லது. இத்தகைய வேண்டாத செடிகள் காய்ந்து, வாடி போய் இருந்தால் அதனை செவ்வாய்க்கிழமை அன்று வேரோடு பிடுங்கி விட வேண்டும்.

- Advertisement -

பிடுங்கிய அந்த செடிகளை ஆற்றில் ஓட விட்டு விட வேண்டும். ஓடிக் கொண்டிருக்கும் நீர் நிலைகளில் இந்த செடிகளை போடுவது தான் நல்லது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எங்காவது தூக்கி வீசி விட்டால் மீண்டும் அங்கு முளைக்கத் தொடங்கிவிடும். வாடிய செடிகளை வீட்டிற்கு பின்புறம் இருந்தால் அதன் மூலம் துஷ்ட சக்திகள் எளிதாக நம் வீட்டை ஆக்கிரமிப்பு செய்யுமாம்.

vilakku-poojai

வீட்டிற்குள் நுழையும் துஷ்ட சக்திகள் நம்மை எதிர்மறையாக சிந்திக்கத் செய்யும். துஷ்ட சக்திகளை வீட்டில் நுழைய விடாமல் தடுப்பதற்கு தான் பல்வேறு பூஜைகளும், புனஸ்காரங்கள் நாம் செய்து வருகிறோம். அப்படி செய்யாதவர்கள் வீட்டில் இது போல செடிகள் மூலம் நுழையும் துஷ்ட சக்திகள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் கூடுமானவரை இந்த செடி வகைகளை களைவது நல்லது. மேலும் வீட்டை சுற்றி கரையான் புற்றுகள் கட்டாமல் பார்த்துக் கொள்வதும் அவசியமாகும். எறும்பு புற்றுகள், கரையான் புற்றுகள் இருந்தால் அதனை அகற்றி முறையாக பராமரிப்பு செய்து வாருங்கள். நம் வீடு மட்டுமல்லாமல், நம் வீட்டை சுற்றி இருக்கும் பகுதியும், மிகவும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. எனவே இத்தகைய குறைகளை நிவர்த்தி செய்து நல்ல பலன்களை பெறலாமே!

- Advertisement -