- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வாக்கை உயர்த்தும் முருகன் வழிபாடு

செல்வாக்கை உயர்த்தும் முருகன் வழிபாடு

- Advertisement -

இந்த கலியுகத்தில் நம்மை தொடரும் எல்லா பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு, கலியுகத்து கடவுளான முருகப்பெருமானை வழிபாடு செய்வதை தவிர வேறு வழியே கிடையாது. பிரச்சனைகள் தீரும் போது தான் வெற்றி கிடைக்கும். வெற்றிகள் குவியும் போது தான் சமுதாயத்தில் செல்வாக்கு உயரம். செல்வாக்கும், செல்வ வளமும் உயர்ந்து கொண்டே செல்ல வேண்டும் என்றால் முருகப்பெருமானை எப்படி வழிபாடு செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை  வெள்ளிக்கிழமை வீட்டில் பூஜை செய்யும் போது கூடவே இந்த முருகப்பெருமானையும் பின் சொல்லக் கூடிய முறைப்படி வழிபாடு செய்தீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக செல்வ வளம் உயர்ந்து கொண்டே செல்லும். கொஞ்சம் கொஞ்சமாக பணக்கஷ்டம் குறைந்து கொண்டே வருவதை உணர்வீர்கள். அந்த முருகன் வழிபாட்டை எப்படி செய்வது ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

செல்வாக்கு உயர முருகன் வழிபாடு

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்றும் செய்யலாம், வெள்ளிக்கிழமை அன்றும் செய்யலாம். காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ள செம்பு தகடு ஒன்று தேவை. இந்த தகடு நமக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். வெறும் தகடு தான், அதில் எந்த சக்கரமோ அல்லது வேற எந்த வார்த்தைகளும் எழுதி இருக்க வேண்டாம். வெறும் செம்பு தகட்டை வாங்கி வாருங்கள்.

முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு முன்பு ஒரு தட்டின் மேலே அந்த தகட்டை வையுங்கள். அந்த தகடுக்கு மேலே கொஞ்சம் விபூதியை தூவி உங்கள் கையாலேயே பரப்பி விடுங்கள். அந்த விபூதிக்கு மேலே உங்கள் வலது கையால், ஆல் காட்டுவிரலால் நட்சத்திர கோலம் போட வேண்டும். அருங்கோன கோலம் என்று சொல்லுவார்கள் அல்லவா. அந்தக் கோலத்தை போட்டுக்கோங்க.

- Advertisement -

அதன் நடுப்பகுதியில் ‘றீங்’ என்ற வார்த்தையை எழுத வேண்டும். நட்சத்திர கோலம் சுற்றி இருக்கும் பகுதியில் சரவணபவ என்ற வார்த்தைகளை எழுதி, இந்த தகட்டை தயார் செய்து வைத்து விடுங்கள். பிறகு ஒரு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு ‘ஓம் றீங் சரவணபவ’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லவும்.

இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். சிறிது நேரம் இந்த விபூதி பூஜை அறையிலேயே இருக்கட்டும். கொஞ்ச நேரம் கழித்து அந்த விபூதியை அப்படியே சேகரித்து ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு ‘ஓம் றீங் சரவணபவ’ என்ற மந்திரத்தை சொல்லி இந்த விபூதியை பூசிக் கொண்டால் அந்த முருகப்பெருமானின் ஆசி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

- Advertisement -

நீங்கள் என்ன முயற்சிகளை மேற்கொள்கிறீர்களோ அதில் சீக்கிரம் வெற்றியும் கிடைக்கும். அந்த வெற்றி செல்வத்தை உங்களிடம் தானாக ஈர்த்துக் கொண்டு வந்து கொடுக்கும். படிக்கும் பிள்ளைகள் முதல் கல்லூரி செல்லும் மாணவர்கள் வரை இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க தேய்பிறை பஞ்சமி பரிகாரம்

தொழில் செய்பவர்கள், கடை வைத்திருப்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் இந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டால். அவர்ரவர் வருமானம் பெருகுவதற்கு உண்டான வழியை அந்த முருகப்பெருமான் காட்டிக் கொடுப்பார் என்பது நம்பிக்கை. அது மட்டும் இல்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் முருகப்பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். வெற்றி உங்கள் பக்கம் நிற்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்