- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வம் பெருக ஆனி பௌர்ணமி வழிபாடு

செல்வம் பெருக ஆனி பௌர்ணமி வழிபாடு

- Advertisement -

பௌர்ணமி என்பது முழு நிலவு தோன்றக்கூடிய நாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படி நிலவு பிரகாசமாக தெரியக்கூடிய அந்த நாளில் நாம் தெய்வ வழிபாட்டின் ஈடுபடும் பொழுது நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாக அமையும் என்பதே தெய்வ வழிபாட்டின் ரகசியமாக திகழ்கிறது. பௌர்ணமி தினத்தில் அம்மன் வழிபாடு, சத்திய நாராயண பூஜை, சிவ வழிபாடு என்று அனைத்து தெய்வங்களையும் நாம் வழிபாடு செய்யலாம். அப்படி வழிபாடு செய்வதன் மூலம் பலவிதமான நன்மைகளையும் பெற முடியும். அந்த வகையில் ஆனி பௌர்ணமி நாளன்று செய்யக்கூடிய வழிபாட்டால் நம்முடைய செல்வ நிலை பெருகும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

செல்வம் பெருக வழிபாடு

பொதுவாக பௌர்ணமி தினத்தன்று பலரும் சத்திய நாராயண பூஜையை செய்வார்கள். இது பெருமாளுக்கு உரிய பூஜை என்று நம் அனைவருக்குமே தெரியும். சத்ய நாராயண பூஜையை யார் ஒருவர் தொடர்ச்சியாக செய்கிறார்களோ அவர்களுக்கு செல்வத்திற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சத்திய நாராயண பூஜையை பலராலும் செய்ய இயலாது என்றே கூறலாம். அதேபோல் பௌர்ணமி நாளன்று சிவ வழிபாடு என்பது பலவிதமான சிறப்புகளை தரக்கூடியதாக திகழ்கிறது. இப்படி பெருமாளையும் சிவபெருமானையும் ஒருசேர நாம் பௌர்ணமி நாளன்று வீட்டிலேயே வழிபாடு செய்யலாம். அதைப்பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஜூலை மாதம் பத்தாம் தேதி முழு பௌர்ணமி இருக்கிறது. அன்றைய தினத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு புதிதாக மலர்களை சாற்றி சந்தனம் குங்குமம் வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். எப்பொழுதும் ஏற்றக்கூடிய தீபத்தை ஏற்றுவிட்டு கூடுதலாக மூன்று அகல் விளக்கில் நெய் ஊற்றி கிழக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். நெய்வேத்தியமாக காய்ச்சிய பசும்பால் அல்லது சுத்தமான தண்ணீரை வைக்கலாம். பிறகு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு “ஓம் சிவாய நம” என்னும் சிவபெருமானின் மந்திரத்தையும் “ஓம் சத்திய நாராயணாய நமஹ” என்னும் மகாவிஷ்ணுவின் மந்திரத்தையும் 21 முறை கூற வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி. காலை வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.

பௌர்ணமி விரதம் இருப்பவர்கள் என்றால் விரதம் இருந்து மாலை நேரத்தில் வழிபாடு செய்யலாம். விரதம் இருக்காதவர்கள் அசைவத்தை முற்றிலும் தவிர்த்து விட்டு மாலை 5:45 மணியிலிருந்து 10:45 மணிக்குள் மாலை நேர வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது 9 அகல் விளக்கில் நெய் ஊற்றி வடக்கு திசை பார்த்து தீபம் ஏற்ற வேண்டும். நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு பழவகையை வைக்கலாம் அல்லது இனிப்பு பொருளை வைக்கலாம். பிறகு சிவபெருமானின் மந்திரமான “ஓம் சிவ சிவ சங்கரா போற்றி” என்னும் மந்திரத்தையும் மகாவிஷ்ணுவின் மந்திரமான “ஓம் நமோ நாராயணாய நமஹ” என்னும் மந்திரத்தையும் 54 முறை கூறவேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். இந்த கற்பூர தீப ஆராத்தியை முழு நிலவிற்கும் மூன்று முறை காட்டி வழிப்பாட்டை நிறைவு செய்துவிட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: வேண்டுதலை நிறைவேற்றும் மஞ்சள் தேங்காய்

முழு நிலவு இருக்கக்கூடிய நாளில் சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் இந்த முறையில் வீட்டிலேயே வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வறுமை முற்றிலும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்