செல்வ சேமிப்பை உயர்த்தும் பரிகாரம்

நாம் அனைவரும் நன்றாக வாழ பணம் வேண்டும். இந்த பணம் நமக்கு கிடைக்க ஏதாவது ஒரு வேலை, தொழில், வியாபாரத்தில் நமது முழு அர்ப்பணிப்பை கொடுத்து உழைக்கின்றோம். இன்றைய காலத்தில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் நமக்கு ஏற்பட்டு, நமது எதிர்கால தேவைகளுக்கு பணம் சேமிக்க முடியாத நிலை உண்டாகிறது. நம்மிடம் இந்த பணத்தின் சேமிப்பு உயருவதற்கான பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

money

மும்மூர்த்திகளில் பல சுகங்களுக்கும், செல்வத்திற்கும் அதிபதியாக “மகாவிஷ்ணு” எனும் “திருமால்” தான் இருக்கிறார். ஜோதிட சாஸ்திரங்களின் படி சிறந்த அறிவாற்றலுக்கும், சகலகலா திறமைகளுக்கும் காரகனான இருக்கும் பச்சை நிற வண்ணம் கொண்ட புதன் பகவான் திருமாலின் அம்சமாக கருதப்படுகிறார். செல்வம் அதிகம் கிடைக்க புதனை வழிபடுவதால் திருமாலின் அருளும் ஒருவருக்கு கிடைக்கிறது. அந்த புதன் பகவானுக்கு சில பரிகாரங்களை செய்து வழிபடுவதன் மூலம் நமது செல்வ நிலை உயரும்.

புதன் பகவான் திருமாலின் அம்சம் கொண்டவர் என்பதால் புதன் கிழமைகள் தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளையும், லட்சுமி தேவியையும் வணங்க வேண்டும். உங்களுடைய சம்பாத்தியம் அதிகரித்து செல்வ சேமிப்பு அதிகம் உயர உங்கள் வீடுகளில் நீங்கள் அலமாரியில் பணத்தை சேகரித்து வைக்கும் பெட்டி, பை போன்றவற்றில் ஒரு புதன் கிழமை அன்று சிறிதளவு வெந்தயத்தை கையில் வைத்துக்கொண்டு, புதன் பகவானுக்குரிய ஹோரையில் அவருக்குரிய மந்திரத்தை 9 முறை துதித்த பின்பு அந்த வெந்தயத்தை நீங்கள் பணம் சேமிக்கும் பெட்டி, பையில் போட்டு வைத்தால் அன்றிலிருந்து செல்வ சேமிப்பு அதிகரிப்பதை அனுபவரீதியாக உணர முடியும்.

Budhan Manthiram

பணப்பெட்டி, பையில் சேமிக்க முடியாத அளவு செலவீனங்கள் உள்ளவர்கள் சிறிய அளவு வெள்ளை துணியில், சிறிது வெந்தயங்களை போட்டு, முடிந்து உங்கள் பூஜையறையில் வைக்க வேண்டும். பின்பு தினமும் காலையில் குளித்து முடித்ததும், பூஜையறையில் இருக்கும் அந்த வெந்தய முடிப்பை உங்கள் கையில் வைத்துக்கொண்டு, புதன் பகவானுக்குரிய மந்திரங்கலை 9 முறை துதித்து வழிபட்டு வர உங்களின் சேமிப்பு உயர தொடங்கும். ஜாதகத்தில் புதன் கிரகம் நீச்சமாக இருப்பவர்களுக்கு பணம் அதிகம் சேருவதில் தடை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்டவர்கள், வெள்ளெருக்கு வேரில் செய்யப்பட்ட விநாயகர் விக்கிரகத்தை தங்களின் வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டால் பொருளாதார நிலை உயரும், பண சேமிப்பு அதிகமாகும்.

இதையும் படிக்கலாமே:
பணம் அதிகம் கிடைக்க செய்யும் பூஜை முறை

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Selvam peruga pariharam in Tamil. It is also called as Selvam sera pariharam in Tamil or Panam sera pariharam in Tamil.