இந்த தண்ணீரை வீட்டின் 8 திசைகளிலும் புதைத்து வைத்தால் 8 வாரத்தில் உங்கள் துன்பம் எல்லாம் காணாமல் போகும்!

kalasam-sembu-lakshmi

வாழ்க்கை என்றாலே துன்பமும், இன்பமும் நிறைந்தது தான். இரண்டையும் சரிசமமாக பார்க்கும் மனோதிடத்தை வளர்த்து கொண்டால் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அது நமக்குப் துன்பமாக தெரிவது இல்லை. நம் கண்முன்னே இருக்கும் சவால் போன்று கம்பீரமாக பார்த்து நின்று சிரிக்கலாம்! துன்பங்கள் தொலைந்து பணமழை பொழிய நாம் கடைபிடிக்க வேண்டிய சூட்சம விதி என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

mantra-thiyanam

தியானம் செய்வது இறைவனை அடைய என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தியானம் என்கிற வார்த்தைக்கு மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பதும் பெயர். மனதை ஒருமுகப்படுத்தி நாம் செய்யும் எந்த ஒரு செயலும் நமக்கு வெற்றியைத் தவிர வேறு ஒன்றும் தருவதில்லை. பணத்தை ஈட்ட விரும்புபவர்கள் முதலில் மனதளவில் நீங்கள் அதற்கு தயாராக வேண்டும்.

உலக பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர்கள் பேசும் பொழுது கவனித்துப் பாருங்கள். எந்த தலைக்கனமும் இன்றி எப்பொழுதும் நேர்மறையான வார்த்தைகளை கூறுவார்கள். பணம் என்பதை மந்திரமாகவே ஓதிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் தான் பணமானது ஒட்டிக் கொண்டு விலகவே செய்யாது. முதலில் உங்களுக்கு தேவை பணமா? பெயரா? புகழா? பதவியா? அல்லது நிம்மதியான வாழ்க்கையா? என்கிற முடிவை நீங்கள் தீர்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த முடிவை நோக்கியே கவனத்தை சிதறவிடாமல் குதிரைக்கு லாடம் கட்டியது போல மனதை ஒருமுகப்படுத்தி ஒரே வழியில் நேர்கோட்டில் செல்ல வேண்டும். அப்படி மனதை ஒருமுகப்படுத்தி தியான நிலையில் ஒரு விஷயத்தை அடைய வேண்டும் என்ற முடிவை நீங்கள் எடுத்து விட்டால் அதற்குப் பிறகு உங்களை வெல்ல எவராலும் முடியாது.

sembu-sombu

நம் முன்னோர்கள் பணம் பெருக பல தாந்திரீக வழிகளை கூறிவிட்டு சென்றுள்ளனர். அந்த வரிசையில் இந்த ஒரு விஷயத்தை செய்யும் பொழுது பணமானது பெருகுமாம். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ! அந்த இடத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் சுற்றியிருக்கும் எட்டு திசைகளில் இருக்கும் ஊர்களிலும் இருந்து ஏதாவது ஒரு ஆறு, குளம், கடல், ஏரி போன்ற இடங்களில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக ஒவ்வொரு செம்பு குவளையில் ஊற்றி வைத்து இருக்க வேண்டும்.

இந்த செம்பு குவளைகள் உடன் வில்வ இலை, நெல்லி இலை, கொம்பு மஞ்சள் ஆகிய இந்த மூன்றையும் சேர்த்து உங்கள் வீட்டில் எட்டு மூலைகளில் இருக்கும் இடங்களிலும் புதைத்து வைக்க வேண்டும். அதன் பின் நீங்கள் எந்த கிழமையில் எந்த நேரத்தில் இதை செய்கிறீர்களோ! அதே நேரத்தில் அதே கிழமையில் தொடர்ந்து குலதெய்வத்தை மனதில் நினைத்து அவருடைய மந்திரங்கள் தெரிந்தவர்கள் உச்சரித்து தீபாராதனை காண்பித்து வர வேண்டும். இப்படி எட்டு வாரங்கள் செய்யும் பொழுது செல்வ நிலையானது மென்மேலும் அதிகரித்து பெருகுமாம்.

money

குறிக்கோள் இல்லாமல் எந்த ஒரு பயணத்தையும் செய்யக்கூடாது. இதைத்தான் அடையப் போகிறேன்! இதுதான் எனக்கு வேண்டும்! என்கிற முடிவை எடுத்துவிட்டு அதன் பின் விடாமுயற்சியுடன் முழுமூச்சாக பயணித்துப் பாருங்கள், வெற்றி உங்களுக்குத்தான். இறை வழிபாடுகள் இன்றி எந்த ஒரு கனவுகளும் பரிபூரணம் அடைவதில்லை. இறைவனை மனதில் தியானித்து முழு பக்தியுடன் உங்களுடைய ஒரே குறிக்கோளை நினைத்து போராடினால் வெற்றி, பெயர், புகழ், பணம், அந்தஸ்து என்று நீங்கள் எதை அடைய நினைத்தாலும் அது உங்களுக்கு கிடைக்கும்.