நாளைய தினம் சித்ரா பௌர்ணமி அன்று கடன் நீங்கி வீட்டில் செல்வம் பெருக இந்த வெற்றிலை பரிகாரத்தை தவறாமல் செய்து விடுங்கள். இப்போது தவற விட்டால் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

- Advertisement -

பௌர்ணமி என்றாலே விசேஷமான நாள் தான். அதிலும் சித்ரா பௌர்ணமி என்பது மிக மிக விசேஷம். இந்த சித்ரா பௌர்ணமி அன்று இந்த வருடம் சுவாதி நட்சத்திரம் சேர்ந்து வருகிறது. கடன் அடைவதற்கான எந்த ஒரு பரிகாரத்தையும் சுவாதி நட்சத்திரத்தில் செய்யும் பொழுது அதற்கான பலன் உடனே கிடைக்கும் என்பதும் ஐதீகம். இத்துடன் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையும் வருகிறது. இவை அனைத்தும் சேர்ந்து வந்திருப்பதால் இன்றைய தினத்தில் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது செல்வம் பெருகுவதுடன் நமக்கு இருக்கும் கடன் பிரச்சனைகளும் குறைய தொடங்கி விடும். இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செல்வம் பெருக வெற்றிலை வெள்ளி நாணயம் பரிகாரம்:
இந்த பரிகாரத்தை நாளை காலை பிரம்ம முகூர்த்த வேளையிலேயே செய்து விட வேண்டும். எனவே அதற்கு முன் கூட்டியே வியாழன் அன்றே பூஜை அறை, வீடு என அனைத்தையும் சுத்தம் செய்து சுவாமி படங்களை துடைத்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து எல்லாம் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் இந்த பரிகாரத்திற்கு நல்ல வெற்றிலை ஒன்று ஒரு வெள்ளி காயின் வெள்ளி காயின் இல்லாதவர்கள் ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தை பயன்படுத்தலாம். ஆனால் வெள்ளி காயின் வைத்து பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பு.

- Advertisement -

வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாருக்கு முதலில் இரண்டு நெய் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு தயாருக்கு பிடித்த வாசனை மிக்க மலர்களால் அலங்காரம் செய்து விட்ட பிறகு, ஒரு முழு வெற்றிலை காம்புடன் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த வெற்றிலையை சுத்தம் செய்த பிறகு அதை ஒரு தட்டில் வைத்து விடுங்கள். அடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக சந்தனம் எடுத்து அதில் பன்னீர் அல்லது உங்கள் வீட்டில் கங்கா தீர்த்தம் இருந்தால் இரண்டில் ஏதாவது ஒன்றை ஊற்றி குழைத்து அதை வைத்து வெற்றிலையின் நடுவில் சந்தனத்தால் ஸ்வஸ்திக் வரைந்து கொள்ளுங்கள். இந்த ஸ்வஸ்திக் சின்னத்தில் நான்கு மூலையிலும் மஞ்சளால் ஒரு சிறிய பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த வெற்றிலை மேல் வரைந்திருக்கும் ஸ்வஸ்திக் சின்னத்தின் மீது வெள்ளிக்காயினை வைத்து விடுங்கள். இதை அப்படியே மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து கற்பூர தீபாராதனை காட்டிய பிறகு இந்த காயினும் எச்சிலையும் பூஜை அறையில் அப்படியே இருக்க வேண்டும். நாளை மாலையும் ஆறு மணிக்கு தீபம் ஏற்றி மறுபடியும் அதே போல் கற்பூர தீபாராதனை காட்டிய பிறகு இந்த வெற்றிலையும் வெள்ளி காயினையும் உங்கள் வீட்டில் துளசி மாடம் இருந்தால் அங்கே கொண்டு வைத்து விடுங்கள். அல்லது மாடியில் வாசலில் நிலவு வெளிச்சம் படும் இடத்தில் வைக்க வேண்டும்.

இது இரவு முழுவதும் நிலவொளியில் படும்படி அப்படியே இருக்க வேண்டும். மறுநாள் காலையில் குளித்து முடித்த பிறகு, இந்த வெற்றிலையை அங்கிருந்து தொட்டு வணங்கி பிறகு எடுத்துக் கொண்டு வந்து உங்களுடைய பணப்பெட்டியில் வைத்து விடுங்கள். வியாபாரம் செய்பவர்கள் வியாபார ஸ்தலத்திலும் வைத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: நாளை சித்ரா பௌர்ணமி! பாவத்தைப் போக்கி, செல்வ வளத்தை அள்ளித் தரும் இந்த சித்ரா பௌர்ணமி வழிபாட்டை வீட்டில் எளிமையான முறையில் எப்படி செய்வது?

இந்த வெற்றிலையை மாதம் மாதம் பௌர்ணமி அன்று இதே போல மாற்றி பூஜை செய்து கொள்ளுங்கள். ஆனால் தொடங்குவது நாளைய தின சித்ரா பௌர்ணமி அன்று தொடங்கும் போது மிகவும் விசேஷமானதாக இருக்கும். இந்த பரிகாரத்தை செய்யும் போது மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் கிடைப்பதுடன் சந்திரனுடைய கதிர்கள் இதில் பட்டு இந்த பொருட்கள் எல்லாம் சக்தி ஊட்டப்பட்டு இதன் மூலம் பணவரவு அதிகரிக்கும் என்பது தான் இந்த பரிகாரத்தில் தார்மீகம். பண வரவை அதிகரிக்க இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து அனைவரும் பயன் அடையலாம்.

- Advertisement -