- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் செல்வ வளம் பெருக

வீட்டில் செல்வ வளம் பெருக

- Advertisement -

வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்க வேண்டுமெனில் அங்கு மகாலட்சுமி தாயாரின் அருட்கடாட்சம் முழுவதுமாக நிறைந்து இருக்க வேண்டும். அத்தகைய அருட்கடாட்சத்தை பெறுவதற்கு நாம் வீட்டில் சில வழிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும். தாயாரின் அனுகிரகத்தை பெற பல வழிமுறைகளை நம் முன்னோர் காலம் முதல் நமக்கு சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இப்பொழுதுள்ள அவசரமான காலக்கட்டத்தில் நாம் அவற்றையெல்லாம் முறையாக பின்பற்ற முடியவில்லை. இதன் காரணமாகவும் இன்று பெரும்பாலான வீடுகளில் எப்பொழுதும் தரித்திர நிலையும், சண்டையும் சச்சரவுமாக இருக்கிறது. ஒரு சில விஷயங்களை நாம் சரியாக கடைபிடிக்கும் போது வீட்டில் சுபிட்சம் அதிகரித்து நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ முடியும் என்பது நம் முன்னோர்களின் வாக்கு.

- Advertisement -

அப்படி தாயாரின் அனுகிரகத்தை பெறவும் வீட்டில் செல்வ வளத்தை அதிகரித்துக் கொள்ளவும் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் பல உள்ளது. அவற்றில் ஒன்றை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

மகாலட்சுமி தாயாரின் அனுகிரகத்தை பெற

தாயாரின் அனுகிரகத்தை பெறுவதற்கு நாம் பாலை வீட்டில் கையாளு முறை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தாயார் அவதரித்ததே பாற்கடலில் என்று தான் சொல்லுவார்கள். ஆகையால் ஒரு வீட்டில் எப்பொழுதும் பால் வற்றாது இருக்க வேண்டும். வற்றாத இருக்க வேண்டும் எனில் அது முழுவதுமாக தீர்ந்து விடாமல் கொஞ்சமாவது இருக்க வேண்டும்.

- Advertisement -

அதே போல் சில வீடுகளில் பாலை காய்ச்சும் போது தினமுமே கவனக்குறைவாக அதை பொங்க விட்டு விடுவார்கள். இதனால் பால் நெருப்பில் பட்டு கருகி விடும். இப்படி செய்வது குடும்பத்திற்கு ஆகாது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். பாலை காய்ச்சி பொங்க விடுவதற்கு என்று சில நியமங்கள் இருக்கிறது. அதன்படி அந்த நேரங்களில் மட்டும் தான் செய்ய வேண்டும். இதை தவிர மற்ற நேரங்களில் பால் பொங்கி கீழே ஊற்றக் கூடாது.

அடுப்பில் பாத்திரம் வைத்து பாலை காய்ச்சும் போது முதலில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன் பிறகு தான் பாலை ஊற்ற வேண்டும். ஏனெனில் முதலில் பாலை ஊற்றினாலும் பாத்திரத்தில் பால் அடி பிடித்து விடும். தண்ணீர் ஊற்றி காய்ச்சும் போது பாத்திரத்தின் அடியில் பால் பிடிக்காது. அதே போல பால் காய்ச்சிய பாத்திரத்தை நாம் வெகு நேரம் காய வைத்து அதன் பின்பு தேய்ப்பது கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இவை அனைத்திலும் விட முக்கியமான ஒன்று பாலை காய்ச்சும் போது அதில் நான்கு அரிசியை போட வேண்டும். இந்த அரிசியும் பாலும் ஒன்றாக இணைந்து கொதிக்கும் இல்லத்தில் சுபிக்ஷம் நிறைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்படி செய்வதனால் பாலும் பொங்கி விழாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமும் சாதாரணமாக காய்ச்சும் ஒரு பாலில் கூட எத்தனை விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். இப்படித் தான் நமக்கு சொல்லி வைத்திருக்கிறார்கள். இதை படி முறையாக கடைபிடிக்கும் வீட்டில் செல்வ வளம் அதிகரித்து தாயாரின் அனுகிரகம் நிறைந்து இருக்கும். பணம் இல்லை என்ற வார்த்தைக்கு வழியில்லாத அளவிற்கு நிம்மதியாக வாழலாம்.

இதையும் படிக்கலாமே: பணவரவு அதிகரிக்க ஏகாதசி மந்திரம்

இந்த முறைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கு நீங்களும் இதை முறையாக பின்பற்றி நல்லதொரு செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ வழி தேடி கொள்ளுங்கள்.

சற்று முன்