வீட்டில் செல்வம் பெறுக உதவும் சித்தர் மந்திரம்

Siddhar-mantra

சித்தர்கள் என்பவர்கள் தமிழ் மக்களின் நலனுக்காக அரும்பாடு பட்டவர்கள். தங்களை வருத்தி பல அற்புத கலைகளை கற்று அதை தமிழர்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தியவர்கள். இன்றிய விஞ்ஞான அறிவியலால் கண்டறிய முடியாதவற்றை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த மகான்கள் அவர்கள். இன்றும் சூட்சும வடிவில் இருந்து பலரையும் வழிநடுத்துபவர்கள். தங்களை முழுமையாக நம்புபவர்களை எப்போதும் கை விடாதவர்கள். அப்படிப்பட்ட மகான்களின் மந்திரத்தை ஜபிப்பதால் நாம் அனைத்து விதமான செல்வங்களையும் பெற முடியும். அந்த வகையில் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் ஒன்றை பார்ப்போம் வாருங்கள்.

siddhar

சித்தர் மந்திரம் :
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!

உடல் அளவிலும் மனதளவிலும் சுத்தமாக இருந்து யாருக்கும் எந்த தீங்கும் நினைக்க கூடாது என்ற மனபக்குவதோடு, சித்தர்களை மனதில் நிலை நிறுத்தி தினமும் ஒரே ஒரு முறை இந்த மந்திரத்தை சொன்னாலே போதும். சித்தர்களின் ஆசி மூலமாக நாம் முதலில் அருட்ச்செல்வதை பெற இயலும். அதை தொடர்ந்து பொருட்ச்செல்லாம் முதல் பல வகையான செல்வங்களையும் நாம் பெற முடியும்.

சித்தர்களின் ஆசியை பெற வேண்டும் என்று நினைத்தால் அதற்கு அடிப்படையே தூய்மையான அப்பழுக்கற்ற மனம் தான். ஆகையால் யாருக்கும் எந்த கெடுதலையும் நினையாத மனப்பக்குவத்தை நாம் முதலில் தியானம் மூலம் பெற வேண்டும். அதன் பிறகு மனதை கட்டுப்படுத்தும் நிலையை அடைந்து, சித்தர்களை மனதில் நிலை நிறுத்தி இந்த மந்திரத்தை ஜெபிப்பதே சிறந்தது. இதன் மூலம் நிச்சயம் சித்தர்கள் நமக்கு வழிகாட்டுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
செவ்வாய் கிழமை ஜபிக்க வேண்டிய செவ்வாய் காயத்ரி மந்திரம்

English Overview:
In increase wealth there is a siddhar mantra in Tamil. Above mantra can be chant only once in Tamil. But our mind and body should be clean while chanting the siddhar mantra. Then only we can get benefits by it.