உடல் பிணி நீங்கி உறுதியாக இருக்க உதவும் செவ்வாய் காயத்ரி மந்திரம்

chevvai bagavan

ஒரு மனிதன் எந்த வேலையே செய்வதாயினும் அதற்கு உடம்பில் தெம்பு வேண்டும். உடலில் உள்ள உஷ்ணம் மூலமாக நமக்கு தெம்பு கிடைக்கிறது. இந்த உஷ்ணத்திற்குரியவர் செவ்வாய் பகவான். உடலில் உள்ள உஷ்ணமானது குறைவானாலும் அதிகப்படியான பிரச்சனை வரும், அதே சமயம் அதிகரித்தாலும் அதிகப்படியான பிரச்சனை வரும். நமது உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தியை சரியாக கொடுத்து நம்மை வழிநடத்துபவர் செவ்வாய். பூமாதேவியின் மகனாக கருதப்படும் செவ்வாய், பூமிகாரகன் என்று அழைக்கப்படுகிறார். செவ்வாய் பகவானை வழிபடும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜபித்தால் பல நல்ல பலன்களை பெறலாம். அதோடு செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு அந்த தோஷத்தின் தாக்கம் குறையும்.

செவ்வாய் காயத்ரி மந்திரம்:
‘ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்’

பொருள்:
வீரத்திற்கு அதிபதியான செவ்வாய் பகவானே, வாழ்வில் ஏற்படும் தடைகளை தகர்த்தெறியும் வல்லமை கொண்டவரே இந்த அடியேனுக்கு நல்லாசி வழங்க வேண்டி உங்களை வணங்குகிறேன்.

தினமும் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பயனாக உடல் பிணி நீங்கும், உடல் உறுதிபெறும், மனதில் தைரியம் பிறக்கும், உள்ளம் தூய்மை அடையும், செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறையும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் ஜபிக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த மந்திரத்தை ஜபித்தால் யோகம் பெறலாம்

English overview:
This artical is about chevvai gayatri mantra in tamil. here we have expalined about the benefits of chanting chevvai gayatri mantra. Chevvai will give the healthy life.