செய்யும் தொழிலில் நன்கு வளர்ச்சி ஏற்பட்டால் தான் செல்வமானது நம் வீட்டில் கடகடவென்று சேர ஆரம்பிக்கும். இல்லையேல் ஒரே மாதிரியாக நம் வாழ்க்கை முன்னேற்றம் இல்லாமல் சென்று கொண்டே இருக்கும். வாழ்க்கை தரம் உயர்வதற்கு, பீரோவின் தென்மேற்கு மூலையில் என்ன செய்ய வேண்டும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த ரகசியத்தை தான் இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
தொழில் வளர்ச்சி அடைந்து மென்மேலும் முன்னேறுவதற்கு, வளர்பிறை வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாட்டை செய்ய மறக்க கூடாது. வெள்ளிக்கிழமை தோறும் பெரும்பாலும் வீடுகளில் பூஜைகள் செய்வது வழக்கமாக வைத்திருப்போம். அதிலும் வளர்பிறை வெள்ளிக்கிழமை என்றால் மகாலட்சுமிக்கு தனி பூஜைகள் செய்ய மறக்கக் கூடாது. மகாலட்சுமி தான் பொருளாதார உயர்வை வளர்ச்சி அடைய செய்யக்கூடியவள்.
மகாலட்சுமியின் திருவுருவப்படம் வீட்டில் வைத்திருக்க வேண்டும். எப்பொழுதும் தாமரை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் மகாலட்சுமியின் படத்தை வைத்திருப்பது நல்லது. மகாலட்சுமி நிற்கும்படியான படங்களை வாங்காதீர்கள். ஒரு வளர்பிறை வெள்ளியில் காலையிலேயே குளித்து, வீடெல்லாம் துடைத்து சுத்தம் செய்து பின் மகாலட்சுமி படத்திற்கு சந்தனமும், ஜவ்வாதும் சேர்த்து பொட்டு வைத்து, குங்குமம் வையுங்கள். கலசம் ஒன்றில் எப்போதும் தண்ணீரை நிரப்பி வையுங்கள். அதில் கொஞ்சம் பச்சை கற்பூரமும், துளசி இலைகளையும் போடுங்கள். இந்த நறுமணம், மகாலட்சுமி அருளை பரிபூரணமாக்கும்.
பின்னர் ஒரு வெள்ளை பட்டு துணியில் நறுமணம் மிகுந்த மற்றும் பணத்தை ஈர்க்கக் கூடிய, மகாலட்சுமி அருள் உள்ள இந்த பொருட்களை எல்லாம் வைக்க வேண்டும். முதலில் துணியில் ஜவ்வாது, பச்சை கற்பூரம், வசம்பு ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் கிராம்பு, சோம்பு, ஏலக்காய், சுருள்பட்டை, ஜாதிக்காய் ஆகியவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் போட்டுக் கொள்ளுங்கள். இதில் அளவெல்லாம் கணக்கு கிடையாது. நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவு போட்டுக் கொள்ளுங்கள் போதும்!
இந்த பொருட்களுடன் கொஞ்சம் புதிய சில்லரை நாணயங்களையும் போட்டுக் கொள்ளுங்கள். சில்லறைகள் ஒரு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாயாக இருப்பது நல்லது. பின் இவற்றை ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். மகாலட்சுமியின் முன்பு பஞ்சகவ்ய விளக்கால் தீபம் ஏற்றுங்கள். பஞ்சகவ்யம் என்பது பசுவின் கோமியம், பால், தயிர், சாணம், நெய் ஆகியவற்றால் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த தீபத்தை ஏற்றி வைத்து, மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன்பின் இந்த மூட்டையை கொண்டு போய் பீரோவில் தென்மேற்கு மூலையில் வையுங்கள். பிறகு வேலைக்கு கிளம்பி செல்லுங்கள்.
இதையும் படிக்கலாமே:
16-02-2025 சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
இந்த மூட்டையில் இருக்கக்கூடிய பொருட்களை மாதம் ஒருமுறை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று இதே போல மகாலட்சுமியின் முன்பு பஞ்சகவ்விய விளக்கை கொண்டு தீபம் ஏற்றிவிட்டு, பின்பு தயார் செய்து மறுபடியும் பீரோவில் வைக்க வேண்டும். இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். மேலும் மென்மேலும் உங்களுடைய உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்து, செல்வமானது வளர செய்யும். பழைய பொருட்களை செடி கொடிகளில் போட்டு விடுங்கள். சில்லறை நாணயங்களை கோவில் உண்டியலில் சமர்ப்பித்து விடுங்கள்.