இன்று மாசி மகம். பிரசித்தி பெற்ற அனைத்து முருகன் ஸ்தலங்களிலும் இந்த மாசி மக திருவிழா, கோலாகலமாக நடைபெறும். திருச்செந்தூர் முருகன் கோவிலில், கடந்த ஒரு வாரமாக மாசி மகத்திருவிழா கோலாகலமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல சுவாமி மலையில் இந்த மாசி மகம் திருவிழா பிரசித்தியாக நடைபெறும்.
முருகப்பெருமான் தன்னுடைய அப்பன் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உச்சரித்த நாள் இந்த மாசி மகம். இந்த புராணக்கதை நடந்த இடம் சுவாமிமலை. ஆகவே இந்த நன் நாளில் சுவாமிமலை முருகனை மனதார ஒரு முறை நினைத்து வணங்கிக் கொள்வோம். அந்த முருகனின் அருளால் நமக்கும் நம் குடும்பத்திற்கும் நிச்சயம் நல்லதே நடக்கும்.
மாசி மகம் முருகர் வழிபாடு
இந்த மாசி மக திருநாளில் நாம் இறைவனிடம் வைக்கக் கூடிய வேண்டுதல்கள், எல்லாம் சீக்கிரம் பலிக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் முருகப்பெருமானை வேண்டி நம்முடைய கஷ்டங்கள் தீர ஒரு எளிமையான பரிகாரத்தை செய்ய போகின்றோம். இன்று மாலை, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். முருகப் பெருமானுக்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த நெய்வேத்தியத்தை முருகனுக்கு வைத்து விடுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் சுக்கு எடுத்து முருகனது திருவுருவ பாதத்தில் வைத்து விடுங்கள்.
சுப்ரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை. சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை என்று சொல்லுவார்கள். அது போல தான் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டம் என்னும் நோய்க்கு இந்த சுக்கு மருந்தாக இன்று வரப்போகிறது. எப்படி தெரியுமா. முருகனது பாதத்தில் வைத்திருக்கும் சுக்குத் துண்டை எடுத்து உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் சின்ன சுக்கு துண்டாக இருக்கட்டும். இல்லையென்றால் அந்த சுக்கை பொடி செய்து கூட எடுத்துக் கொள்ளலாம். ஒரு தாயத்துக்குள் போகும் படி இதனுடைய அளவு இருக்க வேண்டும்.
இந்த சுக்கை கையில் வைத்துக் கொண்டு “ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா” என்று 108 முறை சொல்ல வேண்டும். பிறகு அந்த சுக்கை அந்த கிண்ணத்திலேயே போட்டு, கொஞ்சம் செவ்வரளி புஷ்பங்களால் அந்த சுக்குக்கு அர்ச்சனை செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்து, முருகனுக்கும் பூஜை செய்து இந்த வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
பூஜை நிறைவடைந்த உடன் ஒரு வெள்ளி தாயத்தில் இந்த சுக்கு போட்டு, தாயத்தை மூடி, ஒரு சிவப்பு நிற நூலில் கட்டி, கழுத்திலோ கையிலோ அல்லது உங்கள் கைபுஜங்களிலோ கட்டிக் கொண்டால் போதும். உங்களுடைய வாழ்க்கைக்கு அந்த சுப்ரமணிய சுவாமி துணையாக வருவார். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா அவர். உங்களுடைய வாழ்க்கையை சீர் செய்ய அந்தக் கந்தக்கடவுள் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார்.
இதையும் படிக்கலாமே: மாசி மகம் விநாயகர் வழிபாடு
இந்த நல்ல நாளில் முருகப்பெருமானை வேண்டி இந்த பரிகாரத்தை செய்பவர்கள் யாரும் ஏமாற்ற மாட்டீர்கள். நான் வேண்டியது பலிக்கவில்லையே என்று நிச்சயம் நீங்கள் யோசிக்காத அளவுக்கு, உங்களுக்கான வரங்களை வாரி வாரி வழக்க கூடிய அற்புதம் நிச்சயம் நடக்கும். நம்பிக்கை உள்ள முருகர் பக்தர்களுக்கு இந்த பரிகாரம் வாழ்க்கையில் நல்லதொரு வாழையைக் காட்டி தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.