வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருக்க வழிபாடு

god pray
- Advertisement -

ஒவ்வொருவரும் வீட்டில் தெய்வங்களை வழிபடுவதாக இருந்தாலும் சரி, ஆலயம் சென்று வழிபடுவதாக இருந்தாலும் சரி நம்முடைய குடும்பம் நல்ல முறையில் தழைக்க வேண்டும் என்பது தான். பெரும்பாலும் நாம் ஆலயம் சென்று வழிபடுவது கூட அடுத்த கட்டம் தான். வீட்டில் தினந்தோறும் வழிபாடு செய்வது பிரதானமாக செய்வோம். அப்படி நாம் செய்யக் கூடிய வழிபாட்டை சில முறைகளில் செய்யும் பொழுது தெய்வ அனுகிரகம் நிறைந்து இருக்கும்.

ஒரு வீட்டிற்கு தெய்வத்தின் அனுகிரகம் முழுவதுமாக கிடைத்து விட்டால் போதும். அந்த வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் தாண்டவம் ஆடும் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று தான். ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் அப்படியான தெய்வ அனுகிரகத்தை எப்படி எளிமையாக பெறுவது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

தெய்வ அனுக்கிரகத்தை பெற நித்திய வழிபாடு

பெரும்பாலும் அனைவரும் வீட்டில் தினமும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம். இதை செய்யாதவர்கள் முதலில் இந்த வழிபாட்டை தினமும் செய்ய துவங்குங்கள். அப்படி நாம் வழிபடக் கூடிய பூஜையறையில் என்னென்ன இருக்க வேண்டும் அதைக் கொண்டு நாம் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

முதலில் தீபம் ஏற்றும் விளக்கை பற்றி பார்க்கலாம். நீங்கள் எத்தனை விளக்கு ஏற்றினாலும் கட்டாயம் ஒரு அகல் விளக்காவது பூஜை அறையில் ஏற்ற வேண்டும். கல்லினால் ஆன விளக்கு கிடைத்தால் அதைக் கொண்டு ஏற்றுங்கள் மிகவும் நல்லது. அல்லாத பட்சத்தில் அகல் விளக்கு ஏற்றுங்கள். அடுத்து தெய்வத்திற்கு ஏதாவது ஒரு பூவை தினம் தோறும் வைக்க வேண்டும் இது மிக மிக முக்கியம்.

- Advertisement -

எப்படி நாம் தினமும் பூ வைத்து வழிபடுகிறோமோ அதே போல அந்த பூ காய்ந்தவுடன் உடனே சுவாமி படத்தில் இருந்து எடுத்து கால் படாத இடத்தில் போட வேண்டும் இது அதை விட முக்கியம். அதே போல் பூஜை அறையில் எப்போதும் சந்தனம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சுக்கிர வசியம் கொண்ட பொருளாக பார்க்கப்படுகிறது. சுக்கிரன் என்றாலே பணவரவு செல்வம் ஆகையால் சந்தனம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

அதே போல் நாம் சுவாமிக்கு காட்டும் கற்பூர தீபாராதனை பச்சைக் கற்பூரத்தில் காட்டுவது மகாலட்சுமி தாயாரின் அனுகிரகத்தை பெற்று தரும். இதன் மூலம் வீட்டின் செல்வநிலை பல மடங்கு உயரும் அதே போல தினமும் தூபம் காட்ட வேண்டும். அதற்கு நாம் பயன்படுத்தும் சாம்பிராணி நல்ல மனமுள்ளதாக இருக்க வேண்டும். வீட்டில் இந்த தெய்வீக மனம் கவிழ்ந்தாலே மகாலட்சுமி தாயாரின் வாசம் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

இவை அனைத்திலும் விட முக்கியமானது சாமிக்கு வைக்கக் கூடிய நெய்வேதியம் தினமும் சுவாமிக்கு ஏதேனும் ஒரு நெய்வேத்தியத்தை கட்டாயம் வைக்க வேண்டும். உங்களால்
எதையும் செய்து படைக்க முடியவில்லை என்றாலும் பேரிச்சம் பழம், கற்கண்டு, உலர் திராட்சை இப்படி எளிமையான ஒரு நெய்வேத்தியத்தை சுவாமிக்கு வைக்க வேண்டும் கடவுளை எந்த காரணத்திற் கொண்டும் பட்டினி போடக் கூடாது.

இந்த வழிபாடுகளை நித்திய பூஜை என்று சொல்வார்கள். நித்திய என்றாலே நிரந்தரமாக என்று பொருள். தினந்தோறும் இது போல வழிபாடு செய்யும் இல்லத்தில் எந்தவித குறையும் இருக்காது. இவைகளுடன் நம் உள்ளத்தையும் இல்லத்தையும் தூய்மையாக வைத்திருந்து நல்ல எண்ணத்துடன் இருந்தால் நிச்சயம் இந்த வேண்டுதலுக்கு இணங்கி அனைத்து தெய்வங்களும் நம் இல்லத்தில் வாசம் செய்வார்கள்.

இதையும் படிக்கலாமே: திறமை அதிகரித்து வருமானம் பெருக பரிகாரம்

தெய்வங்களின் அனுகிரகம் பரிபூரணமாக ஒருவருக்கு கிடைத்து விட்டால் வாழ்க்கையில் தோல்வி என்ற வார்த்தைக்கு வழி இல்லை இந்த வழிப்பாட்டு முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இது போல செய்து பலன் அடையலாம்.

- Advertisement -