பெரும் செல்வந்தர்களிடம் தொடர்ந்து பணம் சேர இவைகள் தான் காரணமாம்! இது அவர்களுடைய நம்பிக்கையாம்! அவை என்னவென்று நாமும் தெரிந்து கொள்வோமா?

money-lakshmi

பெரும் செல்வந்தர்கள் சில விஷயங்களை தொடர்ந்து நம்பிக்கையோடு ஆத்மார்த்தமாக இறைவழியில் கடைபிடித்து வருவது உண்டு. இதை ரகசியமாகவும் அவர்கள் செய்து வருவார்கள். இதில் குறிப்பாக சேட்டு எனப்படும் வட நாட்டுக்காரர்கள் பெரும் செல்வந்தராக நிலைத்து நிற்பதற்கு இவைகளை தொடர்ந்து கடைபிடித்து வருவதாக அவர்களே சில குறிப்புகளில் கூறியுள்ளனர். அத்தகைய குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

settu-gold

முதலாவதாக அவர்கள் முழு இறை நம்பிக்கையோடு செயல்படுபவர்கள் ஆக இருப்பார்கள். தங்களுக்கு சில நேரங்களில் போட்ட முதலீடு மொத்தமும் நஷ்டம் ஆகி விடும் என்றாலும் இறை நம்பிக்கையை அவர்கள் கைவிடுவது இல்லையாம். மீண்டும் விழுந்த இடத்திலேயே எழுந்து முயற்சி செய்து அதிக லாபம் ஈட்டி விடுவார்கள். இதிலிருந்து அவர்கள் தன்னம்பிக்கையானவர்கள் என்பது நமக்கு புரிய வருகிறது.

அவர்களுடைய வீடுகளில் அதிகமாக புறாக்கள் நடமாடுவதை நாம் பார்த்திருப்போம். பெரிய பெரிய செல்வந்தர்களது வீட்டு ஜன்னல்கள் இருக்கும் மேல்தள பகுதிகளில் புறாக்கள் அமர்ந்திருப்பதை நாம் உற்று நோக்கினால் தெரிய வரும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? அவர்கள் தங்களது வீட்டு மொட்டை மாடிகளில் புறாக்கள் போன்ற பறவைகளுக்கு தானியங்களை வைப்பது அதனுடன் சிறிதளவு தண்ணீர் வைப்பதும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இவைகளை உண்ண வரும் புறாக்கள் தங்களுடைய கர்ம வினைகளை அழிப்பதாக அவர்கள் நம்புகின்றனர். நம்முடைய சமுதாயத்தில் நாம் காக்கைக்கு உணவு வைப்பது போல், அவர்களுடைய சமுதாயத்தில் பறவைகளுக்கு தானியங்கள் வைப்பது தோஷத்தை போக்கும் என்று நம்புகின்றனர். இதுவே அவர்களிடம் மேலும் மேலும் செல்வத்தை பெருக்கி தருகிறது என்பதையும் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

- Advertisement -

அடுத்ததாக அவர்கள் இருக்கும் வீட்டு பகுதியில் ஆங்காங்கு இருக்கும், கண்களில் தென்படும் எறும்பு புற்றுக்கு அரிசியை வீட்டில் வைத்து இடித்து மாவாக்கி அந்த மாவை கொண்டு வந்து எறும்பு புற்றில் தூவுவார்கள். இதனால் செல்வம் பெருகும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இதற்கு என்ன காரணம் தெரியுமா? ஒரு எறும்பு சாப்பிட்டால் கூட 100 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம் என்பது சாஸ்திரம். நம்முடைய சாஸ்திரத்தில் பச்சரிசியை பயன்படுத்தி கோலம் போட சொல்வதும் இந்த காரணத்தினால் தான். அதை சாப்பிட வரும் எறும்புகளால் நம்முடைய கர்மவினைகள் தீரும் என்பது ஐதீகம். இதனையே அவர்களும் எறும்பு புற்றுகளுக்கு அரிசிமாவு கொடுத்து வினைகளை குறைத்துக் கொள்கிறார்கள்.

ant-erumbu

அதுபோல் அவர்களுடைய பகுதியில் அல்லது அவர்களது வீட்டிற்கு வரும் பசுமாட்டிற்கு தீவனம் வைப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். பசுமாடு தெய்வீக விலங்கினமாக விளங்குவதால் பசுமாட்டிற்கு மிகுந்த மரியாதையும் அவர்கள் கொடுக்கிறார்கள். கோமியத்தை சிறிதளவில் தலையில் தெளித்துக் கொண்டு தீர்த்தமாக அருந்துவார்கள். இதனால் பாவங்கள் தீரும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இதை நாமும் நம்முடைய சாஸ்திரத்தின்படி பின்பற்றி தான் வருகிறோம் என்றாலும் அவர்கள் இதை தவறாமல் செய்கிறார்கள் என்பது தான் இங்கு குறிப்பிடத்தக்கது.

pasu-agathikeerai

மேலும் பசு மாடுகளுக்கு அவைகளைப் பாதுகாக்கும் இடங்களுக்கு சென்று தேவையான பண உதவிகளையும், தானங்களையும் தாராளமாக செய்து வருவார்கள். பசுமாட்டிற்கு செய்யும் தானம் ஆனது சந்ததியை தழைக்க வைக்கும் என்பது நம்பிக்கை. சாஸ்திரம் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். நம் முன்னோர்கள் கூறியுள்ள ஒவ்வொரு விஷயமும் நம்முடைய நல்வாழ்விற்கு என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதனை கடைப்பிடித்து வருவது செல்வ வளத்தை அதிகரிக்கும். சுகபோக வாழ்வு கிட்டும் என்பதை உணர வேண்டும்.

இதையும் படிக்கலாமே
நாளை 16/10/2020 புரட்டாசி மாத கடைசி அமாவாசை பித்ரு மற்றும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் முன்னேற்றம் காணலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.