நாளை 16/10/2020 புரட்டாசி மாத கடைசி அமாவாசை பித்ரு மற்றும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் முன்னேற்றம் காணலாம்.

pithru-kuladheivam

பொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை வெகு விமரிசையாக பித்ருக்களை வேண்டி தர்ப்பணங்களை கொடுப்பது வழக்கம். அது அன்று ஒரு நாளோடு முடிந்து விடும் காரியமல்ல.. தொடர்ந்து 15 நாட்கள் வரை பித்ருக்களை வணங்கி வருவது நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். அவ்வகையில் நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி நாளாகவும், அமாவாசையாகவும் வருகிறது. எனவே உங்கள் முன்னோர்களை வணங்கவும், குலதெய்வ வழிபாட்டையும் இந்த நாளில் மேற்கொண்டால் மேலும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

amavasai1

அமாவாசை நாளில் பொதுவாக எந்த ஒரு நல்ல விஷயங்களையும் செய்ய மாட்டார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா? அமாவாசை நாளில் நிலவும் வெப்பம் மற்றும் காற்றின் ஆற்றல்கள் ஏற்ற இறக்கமாக இருக்கும். பிரபஞ்சத்தின் சக்திகள் சரிவர செயல்பட முடியாமல் திணருமாம். இந்த நாளில் தேவர்கள் முதல் பித்ருக்கள் வரை அத்தனை பேரும் மேலோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

எனவே இந்த நாளில் குலதெய்வ வழிபாட்டையும், பித்ருக்களின் வழிபாட்டையும் செய்தால் நிறைய நன்மைகள் உண்டாகும். எனவே இந்த நாளை தவறவிடாமல் வழிபாடுகள் செய்து சாதாரண நாட்களில் பெறமுடியாத வரங்களை கூட பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு இருக்கும் அத்தனை கஷ்டங்களும் நீங்கி வாழ்க்கையில் முன்னேற நிச்சயம் இந்த வழிபாடுகள் உதவியாக இருக்கும்.

kuladheivam 1

சாதாரண மனிதனுக்கு இறைவனின் ஆசியை காட்டிலும், குலதெய்வத்தின் ஆசிர்வாதமும், பித்ருக்களின் ஆசியும் நிச்சயம் கிடைக்க வேண்டும். இந்த இரண்டு ஆசிகளும் கிடைத்து விட்டால் இறைவனின் ஆசீர்வாதம் பரிபூரணமாக தானாகவே கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. அதனால் தான் அமாவாசை மிகவும் சிறப்புற கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த நாளில் முன்னோர்களுக்கு முதலில் பிடித்தமானவற்றை படைத்து பூஜைகள் செய்ய வேண்டும். பின்னர் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்கள் வீட்டு வாசலில் நிற்கும் உங்களுடைய முன்னோர்கள் திருப்தி கொள்வதாக ஐதீகம் உள்ளது. செய்ய தவறினால் அவர்கள் மனம் புண்பட்டு சென்று விடுவார்கள்.

Amavasai Tharpanam

முன்னோர்களுக்கு போடும் படையலில் புடலங்காய் இடம் பெற்றால் மிகவும் சிறப்பு. மேலோகத்தில் புடலங்காய் மிகச்சிறந்த மூலிகை கொடியாக இருந்து வருகிறதாம். எனவே முன்னோர்களுக்கு இதனை படைப்பதால் காரியங்கள் வெற்றி பெறும். மனதில் நினைத்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் பலிக்கும் என்பது நம்பிக்கை. இதனை விரும்பி பித்ருக்கள் உண்ண வருவாதாக கூறப்படுகிறது. அமாவாசை மட்டுமல்லாமல் சனிக் கிழமையில் உங்கள் முன்னோர்களுக்கு புடலங்காய் சமைத்து படைத்துவிட்டு சாப்பிட்டால் நிறைய நல்லது நடக்கும்.

பசுக்களுக்கு அகத்திக்கீரையும், பச்சரிசி கலந்து வெல்லமும் கொடுப்பது நல்லது. குறிப்பாக அமாவாசை தினத்தில் நீங்கள் செய்யும் அன்னதானம் உங்களை வாழ்வில் நல்ல நிலைக்கு கொண்டு வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களால் முடிந்தவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு போடுங்கள் போதும்.

agathi-keerai-dhanam

அது போல் தர்பணம் கொடுத்ததும், குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். குலதெய்வ படத்தை வைத்து, குலதெய்வ மந்திரத்தை உச்சரித்து, தூப தீப ஆராதனைகள் செய்யலாம். நைவேத்யமாக சர்க்கரைப் பொங்கல் படையுங்கள். இந்த நாளில் இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்கி குலதெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
12 ராசிகளுக்கான மகா சக்தி பெற்ற 1 வரி மந்திரங்கள் இதோ! இதை உச்சரித்தால் நடக்கும் அதிசயங்களை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.