ஒருவருக்கு எப்படி அவருடைய ஜாதகம் வேலை செய்கிறதோ அதேபோல்தான் ஒருவர் இருக்கும் இடமும் அவருக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வேலை செய்யும். அப்படி இருக்கும் இடத்திற்கு நாம் பார்க்கக்கூடிய ஒன்றுதான் வாஸ்து. வாஸ்து ரீதியாக பல பிரச்சினைகள் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு சென்ற பிறகு அவர்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிப்பதை நாம் பார்த்திருப்போம். அதற்கு காரணம் அந்த வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து அமைப்பு.
இன்னும் சிலர் நன்றாக இருப்பார்கள், அந்த வீட்டிலிருந்து வேறொரு வீட்டிற்கு போனதும் அவர்களுடைய செல்வ செழிப்பு அனைத்தும் படிப்படியாக குறைந்து ஒன்றும் இல்லாமலோ அல்லது கடனில் மூழ்கக் கூடிய சூழ்நிலையோ உண்டாகும். இவை அனைத்திற்கும் வாஸ்துவே முக்கியமான காரணமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட வாஸ்து ரீதியான சில குறிப்புகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு திசைக்கு ஏற்றார் போல் எந்தெந்த இடத்தில் எந்தெந்த அறைகள் இருக்க வேண்டும், அந்த அறைகளில் ஒரு குடும்பத்தை சேர்ந்த எந்த நபர் இருந்தால் அவர்களுக்கு செல்வ செழிப்பு உண்டாகும் என்று வாஸ்து ரீதியாக பல வழிமுறைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் நாம் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே இருந்தால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது என்று கூட கூறலாம். ஆனால் சில முக்கியமான குறிப்புகளை நாம் பின்பற்றினோம் என்றால் அதனால் நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக அக்னி மூலையில் தான் சமையலறை இருக்க வேண்டும் போன்றவை. இதைப்போல் சில வழிமுறைகளை நாம் பின்பற்றும் பொழுது நமக்கு வாஸ்துவால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறையும். செல்வ செழிப்ப அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து என்று இருக்கும். அந்த பூர்வீக சொத்தில் பூர்வீக வீடு இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டின் வாஸ்துவின் படி தான் அவர்களுடைய வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
அந்தப் பூர்வீக வீட்டை முறையாக பராமரித்து வாஸ்துரீதியாக அது அமைக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதே பூர்வீக வீடு இருக்கிறது அதில் யாருமே இல்லை அது பாழடைந்து இருக்கிறது என்னும் பட்சத்தில் அதனால் அவர்களுடைய வாழ்க்கையும் பாழடைந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பூர்வீக வீட்டை இடித்துவிடலாம் அல்லது அங்கு யாரையாவது தங்க வைத்து முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும்.
அடுத்ததாக நாம் சொந்த வீட்டில் இருந்தாலும் வாடகை வீட்டில் இருந்தாலும் கிழக்குப் பக்கம் முற்றிலுமாக அடைப்பட்டு இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் எந்த தெய்வத்தின் அருளும் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஏனென்றால் சூரியன் உதயமாகும் திசை கிழக்கு. அப்படி சூரியன் உதயமாகும் பொழுது சூரிய கதிர்கள் நம்முடைய வீட்டிற்குள் வந்து விழவேண்டும். விழுந்தால் தான் தெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும். மேலும் இதனால் நோய்களும் தீர்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளது.
எந்த ஒரு வீட்டில் கிழக்கு திசை முற்றிலுமாக அடைக்கப்பட்டு இருக்கிறதோ அந்த வீட்டில் கிழக்குப் பக்கம் ஒரே ஒரு ஜன்னலாவது வைக்க வேண்டும். அப்படி ஜன்னல் வைக்க முடியாது, வாடகை வீட்டில் இருக்கிறோம் என்பவர்கள் அந்த வீட்டை மாற்றினால் தான் அவர்களுடைய வாழ்க்கை வெளிச்சமாக மாறும். இதேபோல் நம்முடைய வீட்டில் பூஜை அறை என்பது தென்கிழக்கு திசையிலோ அல்லது வடமேற்கு திசையிலோ இருந்தால் அந்த வீட்டில் பணவரவு என்பது அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே: நன்மைகள் பெருக ஆடிப்பெருக்கு வழிபாடு
இந்த வாஸ்து குறிப்புகளை நாம் மனதில் வைத்துக் கொண்டு சொந்த வீடாக இருந்தாலும் வாடகை வீடாக இருந்தாலும் பூர்வீக வீடாக இருந்தாலும் பின்பற்றி வந்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அனைத்து விதமான தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்கப்பெற்று பணவரவு என்பது அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.