- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீடு சுபிக்ஷமாக இருக்க சிவ வழிபாடு

வீடு சுபிக்ஷமாக இருக்க சிவ வழிபாடு

- Advertisement -

மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் முழுமுதற் கடவுளாகவும் பிறப்பு, இறப்பு இல்லாத பரம்பொருளாகவும் விளங்குகிறார். அத்தகைய சிவபெருமானை வேண்டி வணங்கும் பக்த கோடிகள் ஏராளம். மனிதனுடைய பாவங்களையும் தோஷங்களையும் நீக்கி அவர்களை நல்ல முறையில் வாழ வைக்கக் கூடிய வல்லமை படைத்தவர் இந்த சிவபெருமான்.

பெரும்பாலும் சிவ வழிபாட்டை ஆலயத்தில் செய்வதுதா ன் வழக்கம். ஏனெனில் வீட்டில் சிவ வழிபாடு செய்வதெனில் அதற்கான விதிமுறைகள் அதிகம் என அநேகம் பேர் நினைக்கின்றார்கள். சிவபெருமான் எளிமையான முறையில் வீட்டிலும் வணங்க முடியும். அப்படி வணங்குவதன் மூலம் சகல செல்வங்களையும் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமானை நம் வீட்டில் எளிமையாக எப்படி வழிபாடு செய்வது என்பதையும், அதன் மூலம் சிவ அருளை நாம் எப்படி பெறுவது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் சகல செல்வமும் பெருக சிவ வழிபாடு

இந்த வழிபாடு செய்வதற்கு வீட்டில் சிவலிங்கம் வைத்திருப்பவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். சிவபெருமான் லிங்கம் இல்லையென்றால் பரவாயில்லை சிவனின் திருவுருவ படத்தை வைத்தும் வணங்கலாம். எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை சிவபெருமானை மனதார நினைத்து வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

அதே போல் இந்த வழிபாடு செய்வதற்கு சங்கு இருந்தால் மிகவும் நல்லது. சங்கு இல்லாதவர்கள் அதை வாங்க முடிந்தவர்கள் வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி சங்கு வாங்க முடியாது என்பவர்கள் வீட்டில் இருக்கும் பஞ்ச பாத்திரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சிவ வழிபாடு என்பதால் வில்வ இலை இதற்கு மிகவும் அவசியம். ஆகவே வில்வ இலையை கொஞ்சம் வாங்கி வந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது சிவலிங்கம் அல்லது படம் இருந்தால் அவற்றிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஏதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை பூஜை அறையில் முதலில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து விடுங்கள் விளக்கு கிழக்கு நோக்கி எரியட்டும். அடுத்ததாக வில்வ இலையை சங்கு இருந்தால் அதில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் வில்வ இலையை அதில் போடுங்கள். இல்லை என்றால் பஞ்ச பாத்திரத்தில் போடுங்கள்.

சிவலிங்கம் வைத்திருந்தால் இந்த தண்ணீரை கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம் சிவலிங்கமும் படமும் இல்லை என்பவர்கள் வேறு ஒரு சுத்தமான பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த வில்வம் சேர்த்த தண்ணீரை ஊற்றிய படியே ஓம் நம சிவாய என்ற நாமத்தை சொல்ல வேண்டும். இதை செய்த பிறகு கொஞ்சம் வில்வ இலையை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதாக மனதில் பாவித்து கொண்டு சிவ அஷ்டோத்திரத்தை சொல்லி ஒவ்வொரு வில்வ இலையாக போடுங்கள். சிவலிங்கம் இருந்தால் அவற்றுக்கு செய்யலாம் இல்லாதவர்கள் மனதார நினைத்துக் கொண்டு போடுங்கள். இந்த வழிபாடு முடிந்த பிறகு நீங்கள் அபிஷேகம் செய்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். சிவன் அருள் நிறைந்திருக்கும்.

வீட்டில் வேல் வைத்திருப்பவர்களும் இதே முறையில் வழிபாடு செய்யலாம் அதற்கும் வில்வ இலை தண்ணீர் கொண்டு அர்ச்சனை, அபிஷேகம் அனைத்தும் செய்யலாம் அந்த வழிபாடும் இதே பலனையே தரும். வீட்டில் சகல செல்வங்களும் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்க பரம்பொருளை இந்த முறையில் வழிபாடு செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: செல்வம் சேர குபேர மந்திரம்

இந்த முறையில் வழிபாடு செய்வதை அனைத்து நாட்களிலும் செய்ய முடியா விட்டாலும் பிரதோஷ காலங்களில் சிவபெருமானை நினைத்து செய்யும்போது அமோகமான பலனை பெறலாம் இந்த வழிபாடு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து சிவன் அவர்களை பெறுங்கள்

சற்று முன்