ஐஸ்வர்யம் தரும் கால பைரவர் வழிபாடு

bhairavar-coin
- Advertisement -

அஷ்டலஷ்மிகளை நாம் வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் நம்முடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அஷ்ட லட்சுமிகளே தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபாடு செய்வார்கள்.

அப்படிப்பட்ட பைரவரை நாமும் வழிபடும் பொழுது நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் நம்மால் பெற முடியும் என்று கூறப்படுகிறது. பைரவர் எந்த முறையில் நாம் தீபமேற்றி அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிப்பாட்டை எந்த நாளில் எப்படி செய்ய வேண்டும் என்பதை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

செல்வம் பெருக அஷ்டமி வழிபாடு

அஷ்ட ஐஸ்வரியத்தையும் ஒருவர் பெற வேண்டும் என்றால் அவர் அஷ்டலஷ்மிகளை வழிபடுவதோடு கால பைரவரையும் சேர்த்து வழிப்பட வேண்டும். கால பைரவரை நாம் பொதுவாக தேய்பிறை அஷ்டமி தினங்களில் வழிபடுவோம். அதுதான் அவருக்கு மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் தினமும் வரக்கூடிய ராகு காலத்தில் கால பைரவரை நாம் வழிபாடு செய்வதும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. இந்த வழிபாட்டை தேய்பிறை அஷ்டமி அன்று ராகு காலத்தில் அருகில் இருக்கக் கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக் கூடிய கால பைரவருக்கு பூசணிக்காய் தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

ஒரு பூசணிக்காயை வாங்கி அதை இரண்டாக நறுக்கி உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் பஞ்சு திரியை குங்குமத்தில் நன்றாக நனைத்து உலர வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பூசணிக்காய்க்கு சந்தனம் குங்குமம் வைத்து விட்டு பூசணிக்காயில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி நாம் தயார் செய்து வைத்திருக்கும் சிவப்பு திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இப்படி தீபம் ஏற்றிய பிறகு 108 ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து வந்து காலபைரவரின் 108 போற்றிகளையோ அல்லது “ஓம் கால பைரவரே போற்றி” மந்திரத்தையோ 108 முறை கூறி அந்த ஒரு ரூபாய் நாணயத்தால் காலபைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு இந்த நாணயத்தை எடுத்து வந்து உங்களுடைய பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விட வேண்டும். அல்லது வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமியின் பாதத்திற்கு கீழ் ஒரு மஞ்சள் நிற துணியில் கட்டி மூட்டையாக வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்படி வழிபாடு மேற்கொள்வதன் மூலம் கால பைரவரின் அருளை பெறுவதோடு, அஷ்டலட்சுமிகளின் அருளையும் பெற்று வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி ஐஸ்வர்யத்தை பெற முடியும். இந்த வழிபாட்டை நம்முடைய வீட்டிலும் மேற்கொள்ளலாம். ஆனால் வீட்டில் பூசணிக்காய் தீபம் ஏற்றுவதற்கு பதிலாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்துஒரு ரூபாய் நாணயங்களை வைத்த அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர செவ்வாய்க்கிழமை வழிபாடு

இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை இருப்பவர்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த காலபைரவர் வழிபாட்டை மேற்கொண்டாலேயே அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உணர முடியும்.

- Advertisement -