- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர செவ்வாய்க்கிழமை வழிபாடு

கடன் தீர செவ்வாய்க்கிழமை வழிபாடு

- Advertisement -

மனிதனை நிம்மதி இல்லாமல் நிலைகுலைய செய்யக்கூடிய பிரச்சனைகள் பல உண்டு. அவற்றுள் முக்கியமானதாக கருதப்படுவது கடன் தொல்லை தான். இந்த கடன் என்னும் அரக்கன் ஒருவன் வாழ்க்கையில் நுழைந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதி என்னும் வார்த்தையை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. அப்பேர்ப்பட்ட கடன் தொல்லையிலிருந்து மீளக் கூடிய ஒரு எளிய பரிகார முறையைத் தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கடன் தீர பரிகாரம்

பொதுவாக முருகப்பெருமானை அனைவரும் சரணடைவதற்கு காரணம் கடன் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதில் முதன்மையான தெய்வம் என்ற காரணத்தினால் தான் நம் கடனால் பாதிக்கப்படுவது செவ்வாய் காரகத்துவத்தால் தான் அந்தச் செவ்வாய் காரகனுக்கு உரிய அதி தேவதையாக விளங்க கூடியவர் முருகப்பெருமான்.

- Advertisement -

ஆகையால் முருகப்பெருமானை வணங்கும் போது கடன் தொல்லையிலிருந்து முற்றிலுமாக நாம் வெளிவரலாம் என்று நம்பப்படுகிறது. இந்த வழிபாட்டையும் முருகப்பெருமானை நினைத்து செவ்வாய்க்கிழமையில் செய்ய வேண்டும். அதுவும் செவ்வாய் ஹோரையில் செய்ய வேண்டும். செவ்வாய் ஹோரை காலை மதியம் இரவு என மூன்று நேரத்தில் வரும் உங்கள் வசதிக்கேற்ப நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு சிறிய மூடி போட்ட பிளாஸ்டிக் டப்பா எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு துவரம் பருப்பு ஒரு ரூபாய் நாணயம் கொஞ்சம் உதிரி பூக்கள். செவ்வாய்க்கிழமை நேரத்தில் இந்த பரிகாரம் செய்வதற்கு முன்பாக முருகப்பெருமான் படத்தை துடைத்து மஞ்சள் பூங்கமும் பொட்டு வைத்து தீபம் ஏற்றங்கள் அன்றைய தினத்தில் வெற்றிலை தீபம் ஏற்றுவது சிறப்பு இல்லை என்றால் நெய் தீபம் ஏற்றி வைத்தாலும் போதும்.

- Advertisement -

உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு எளிய நெய்வேத்தியத்தை செய்து வைத்துக் கொள்ளுங்கள். முருகப்பெருமானை உங்கள் கடன் தீர மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்த டப்பாவில் ஒரு கைப்பிடி துவரம் பருப்பை போடுங்கள். அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள். இப்போது சிறிது பூக்களை இதன் மேல் தூவி முருகனை மனதார கடன் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த டப்பாவை மூடி பூஜை அறையில் வைத்து விடுங்கள் தினந்தோறும் தீபம் ஏற்றும் போது முருகப்பெருமானை நினைத்து கடன் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டே வாருங்கள். அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை இதே போல துவரம் பருப்பு ஒரு ரூபாய் நாணயம் கொஞ்சம் பூக்களை அதே டப்பாவில் போட்டு மறுபடியும் மூடி வைத்து விடுங்கள். இது போல ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

- Advertisement -

ஒன்பது வாரங்கள் கழித்து துவரம் பருப்பை பசு மாட்டிற்கு தானமாக கொடுத்து விடுங்கள். அதில் இருக்கும் நாணயத்தை ஆலயத்தின் உண்டியலில் சேர்த்து விடுங்கள். பூக்கள் வாடி இருக்கும் அதை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த ஒன்பது வாரங்கள் உங்கள் பரிகாரம் முடிவதற்குள்ளாகவே நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதற்கான சாத்திய கூறுகள் உண்டு.

பெண்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது மாதவிலக்கான நேரத்தை கணக்கில் கொள்ள வேண்டாம் தொடர்ந்து செய்யலாம். கடன் மட்டுமின்றி நிலம் தொடர்பான பிரச்சனை தீரவும் நோய் தீர இப்படி நம்முடைய அனைத்துவித பிரச்சனைகளுக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம்ஆனால் ஒரு நேரத்தில் ஒரு வேண்டுதலை மட்டும் தான் வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பண பிரச்சினை தீர முருகர் வழிபாடு

முருகப்பெருமானை நினைத்து செய்யப்படும் இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் சேர்த்து முழு பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்