- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வத்தை ஈர்க்கும் பொருட்கள்

செல்வத்தை ஈர்க்கும் பொருட்கள்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் அவர் செய்யக்கூடிய செயல்களில் தடைகள் எதுவும் இல்லாமல் வெற்றிகரமாக நடந்தால்தான் அவருக்கு செல்வ செழிப்பு என்பது ஏற்படும். செல்வ செழிப்பிற்கும் தடைகளுக்கும் தாமதங்களுக்கும் மிக முக்கியமான தொடர்பு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தடைகளையும் தாமதங்களையும் நீக்கினாலே நமக்கு செல்வ செழிப்பு என்பது ஏற்பட்டு விடும் என்று பலரும் உணர்ந்திருப்போம். அப்படிப்பட்ட தடைகளையும் தாமதங்களையும் நீக்குவதற்கும் செல்வ வளத்தை அதிகரிக்கவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடிய கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுபவர் குருபகவானும் புதன் பகவானும். இவர்கள் இருவரும் பெரும் செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களோடு தடைகளை நீக்குவதற்கு சனிபகவானையும் ஒன்றாக சேர்த்தால் நம்முடைய தடைகளை நீக்கி செல்வ செழிப்பை அதிகரிக்க முடியும்.

- Advertisement -

அப்படி இவர்கள் மூவரையும் ஒருசேர வைத்துக் கொள்வதற்கு இவர்களின் அம்சம் பொருந்திய பொருட்களை நாம் ஒன்றாக வைத்துக் கொண்டாலே போதும். அரச இலை மற்றும் வன்னி இலை இந்த இரண்டு இலைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நல்ல வசம்பாக பார்த்து ஒரு வசம்பை எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தமான சந்தன கட்டையை வாங்கி அதில் தண்ணீர் ஊற்றி அதை இழைத்து அந்த சந்தனத்தை எடுத்து வசம்பின் மீது தடவிக் கொள்ள வேண்டும்.

பிறகு அரச இலைக்கு மேல் வன்னிலையை வைத்து அதற்கு மேல் சந்தனம் தடவிய வசம்பை வைத்து சுற்றி நூலை வைத்து கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி செல்வ செழிப்பு உயரும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இன்னும் ஒரு பரிகாரம் இருக்கிறது. இதற்கும் நமக்கு வசம்பு, அரச மர குச்சி மற்றும் தர்ப்பைப்புல் வேண்டும்.

- Advertisement -

அரச மரம் என்பது தடைகள், தடங்கல்கள், விரக்தி மனப்பான்மை போன்றவற்றை நீக்க கூடியதாக திகழ்கிறது. வசம்பு பல மருத்துவ குணம் மிகுந்ததாக இருந்தாலும் அது எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டதாக திகழ்கிறது. தர்ப்பைப்புல் அமிர்தத்திற்கு இணையான பொருளாக கருதப்படுகிறது என்பதால் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு சிறிய பையில் போட்டு வைத்துக் கொள்வது அல்லது தாயத்தாக தயார் செய்து வைத்துக் கொள்வது என்று நாம் செய்ய வேண்டும்.

ஒன்றை வீட்டு பூஜை அறையிலும் மற்றொன்றை நம் உடனேயே வைத்துக் கொண்டால் நமக்கும் நம் வீட்டிலும் எந்தவித தடைகளும் ஏற்படாது. செல்வ செழிப்பு என்பது அதிகரித்துக் கொண்டே செல்லும். மேலும் வசம்பு பொடியை தாயத்தில் போட்டு வைத்துக் கொள்வது என்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. அதை போல் ஒருவருடைய வயதின் எண்ணிக்கையை பொறுத்து தர்ப்பை புல்லை எடுத்து நூலில் நன்றாக கட்டிக்கொண்டு சிவபுராணத்தை படித்த பிறகு அதை காப்பாகவோ தாயத்தாகவோ வைத்துக் கொண்டோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி பணவரவு நம்மைத் தேடி வரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே ஆடி மூன்றாம் வெள்ளி நிலை வாசல் வழிபாடு

எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை முறையாக நாம் பயன்படுத்தி நம் வாழ்வில் இருக்கக்கூடிய தடைகளையும் தடங்கல்களையும் நீக்குவதோடு செல்வ வளத்தையும் அதிகரித்துக் கொள்வோம்.

சற்று முன்