பொதுவாகவே வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு ஒரு ஆசை இருக்கும். நாம் சேர்த்து வைத்த சொத்து நம்முடைய பிள்ளைகளை போய் சேர வேண்டும். நம்முடைய பேரப்பிள்ளைகளைப் போய் சேர வேண்டும். சேர்த்து வைத்திருக்கும் சொத்தோ, நகையோ, பணமோ எதுவும் வீணாக செலவாகக் கூடாது என்று நிச்சயம் விரும்புவீர்கள். நம்முடைய சேமிப்பும் நம்முடைய சொத்தும் அடுத்த தலைமுறை போய் அடையும் போது தான் நமக்கு ஒரு நிம்மதி கிடைக்கும்.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் நாம் சம்பாதிக்கும் பணம் நகையையும் அடமானத்தில் கொண்டு போய் வைக்கின்றோம். நம் பாட்டன் பூட்டன் சம்பாதித்த சொத்தையும் விற்று சாப்பிடுகின்றோம். நாம் சம்பாதித்த சொத்தும் நம் கையில் நிலையாக தங்க வேண்டும் நம் முன்னோர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்து நம் கையை விட்டுப் போகக்கூடாது இதற்கு விநாயகரை எப்படி வழிபாடு செய்வது. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
செல்வ வளத்தை பாதுகாக்க விநாயகர் வழிபாடு
நம்முடைய சொத்தை பாதுகாக்க கூடிய கடவுள் என்றால் அது விநாயகர் தான். தினமும் விநாயகரை யார் வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுடைய உடைமைகள் சொத்துகள் நகைகள் பணம், பத்திரமாக அவர் வீட்டிலேயே இருக்கும். தினம்தோறும் விநாயகரை எப்படி வழிபாடு செய்வது. தினமும் விநாயகரை இனிப்பு பலகாரங்கள் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
முடிந்தால் உங்கள் வீட்டிலேயே உங்கள் கையாலேயே ஏதாவது இனிப்பு பலகாரங்களை செய்து வீட்டில் இருக்கும் விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து அந்த இனிப்பு பலகாரங்களை வீட்டில் இருப்பவர்களும் கொஞ்சம் சாப்பிட்டு, வெளியில் இருப்பவர்களுக்கும் கொஞ்சம் தானம் கொடுக்க வேண்டும். வீட்டில் சின்னதாக ஒரு வெள்ளி பிள்ளையார் வாங்கி வைத்து வழிபாடு செய்யலாம்.
வசதி இருப்பவர்கள் தங்கத்தில் கூட விநாயகர் வைத்து வழிபாடு செய்யலாம். எதுவுமே முடியாது என்பவர்கள் வீட்டில் இருக்கும் பிள்ளையாரின் திருவுருவப்படத்திற்கு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். மார்வாடிகளின் வருமானம் பெருகுவதற்கு அவர்கள் செய்யும் விநாயகர் வழிபாடும் ஒரு காரணம். வடநாட்டவர்கள் விநாயகருக்கு விதவிதமாக இனிப்பு பலகாரங்களை படைப்பார்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா. பிள்ளையாரை கும்பிட்டுக் கொண்டே இருந்தால் உங்கள் செல்வம் உங்கள் கையை விட்டு நிச்சயம் போகாது.
உங்கள் வீட்டு பீரோவில் இருக்கக்கூடிய பணம் நகை சொத்து பத்திரம் இவைகளை எல்லாம் சுருக்கு பை போல வடிவம் கொண்ட ஒரு பையில் போட்டு பத்திரப்படுத்தி வைக்கும் பட்சத்தில் அந்த பொருட்கள் எல்லாம் அடமானத்திற்கு செல்லாமல் விற்கப்படாமல் நிலையாக உங்களுடைய வீட்டில் தங்கும். அந்த சுருக்கு பைக்குள் சின்னதாக ஒரு பிள்ளையார் படம் அல்லது பிள்ளையார் சிலையை போட்டு வையுங்கள். இன்னும் சுபிட்சம்.
மேல் சொன்ன விஷயங்களை கடைப்பிடிப்பதில் உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா. ஒரு கிலோ லட்டு வாங்கிக்கோங்க. நேரா வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று அவருக்கு இந்த லட்டுவை பிரசாதமாக வைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, இந்த லட்டுவை அங்கு கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்கு தானமாக கொடுத்துவிட்டு வரவும். வாரத்தில் ஒரு நாள் இதை செய்தாலும் உங்களுடைய செல்வ செழிப்பு வீணாக, வீண்விரயம் ஆகவே ஆகாது.
வீட்டில் இருக்கும் பணம், தேவைக்காக நிச்சயம் செலவு ஆகத்தான் செய்யும். ஆனால் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது காரணமே இல்லாமல் மருத்துவமனைக்கு ஒரு லட்ச ரூபாய் செலவு செய்தேன் என்ற சூழ்நிலை வராது. அனாவசியமாக அடுத்தவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற மாட்டீர்கள். உங்களுடைய பணத்தையும் யாரும் வந்து ஏமாற்ற மாட்டார்கள். வீண் விரைய செலவுகள் குறையும்.
நிறைய பேர் தங்களுடைய பாட்டன் பூட்டன் சம்பாதித்த சொத்தின் அருமை பெருமைகள் தெரியாமல் அதை இழந்து விடுவார்கள். பிறகு தான் பணத்திற்கு கஷ்டப்படும் போது தான் எவ்வளவு சொத்தை வீணடித்திருக்கின்றோம் என்றே சிந்தித்துப் பார்ப்பார்கள். அப்படி ஒரு சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடாது என்றால் நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு விநாயகர் வழிபாடு. இதனுடைய அருமை பெருமைகள் எல்லாம் விநாயகரை உண்மையான பக்தியுடன் வழிபட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
இதையும் படிக்கலாமே: ஆடி வெள்ளி என்று சொல்ல வேண்டிய அம்மன் பீஜ மந்திரம்
இன்றைக்கு விநாயகரை வழிபாடு செய்துவிட்டு நாளைக்கு அம்பானி ஆக வேண்டும் என்று எண்ணக்கூடாது. தொடர்ந்து அந்த விநாயகரை வழிபாடு செய்து வாருங்கள். நிச்சயம் உங்களுடைய நிதி நிலைமையில் மாற்றம் தெரியும். சொத்து பொருள் பணம் தங்கம் வெள்ளி வீட்டில் சேர்வதிலும் நல்ல மாற்றங்கள் தெரியும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.