ஒரு மனிதனுக்கு தைரியம் இருந்தால் மட்டும் தான் வாழ்க்கையில் போராடி ஜெயிக்க முடியும். தைரியம் என்று சொல்லக்கூடிய சக்தி நமக்குள் வரவேறும் என்றால் சக்தி தேவையை தான் வழிபாடு செய்ய வேண்டும். அதுதான் ஆதிபராசக்தி வழிபாடு. சக்தியை பரிபூரணமாக நாம் பெற வேண்டும் என்றால், ஆடி வெள்ளியில் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த பீஜ மந்திரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நாளை ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை. இந்த நாளில் வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லோரும் பின் சொல்லக் கூடிய வழிபாட்டை செய்தால் நீங்கள் பராசக்தியின் மறு உருவமாக மாறிவிடுவீர்கள்.
பராசக்தி மந்திரம்
நாளைய தினம் அதிகாலை வேலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்து விடவும். வாசல் தெளித்து கோலம் போட்டு, நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து உங்கள் வீட்டை மங்களகரமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பூஜை அறையில் வந்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பராசக்தியை மனதார நினைத்துக் கொண்டு பராசக்தியின் பீஜ மந்திரமான ‘ஓம் ஹ்ரீம் நம’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.
பராசக்தி தேவைக்கு ஏதாவது ஒரு பிரசாதம் நெய்வேதியம் கட்டாயமாக வைக்க வேண்டும். ஒரு டம்ளர் சுத்தமான பாலில் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் போட்டு வைத்துவிட்டு இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு, அந்த பிரசாதத்தை வீட்டில் இருக்கும் பெண்கள் பருகுவது ரொம்ப ரொம்ப நல்லது. ‘ஹ்ரீம்’ என்பது ஆதிபராசக்தியின் பீஜ நாமம். பீஜ மந்திரம் என்பது ஆயிரம் நாமங்களை உள்ளடக்கியது. பராசக்தியின் 1008 நாமத்தை சொன்ன பலனை நீங்கள் பெற வேண்டும் என்றால், இந்த ஒரே ஒரு மந்திரத்தை நாளைய தினம் சொன்னாலே போதும். பராசக்தியின் பரிபூரண ஆசையை பெற்றுவிடலாம்.
நாளைய தினம் மட்டும் தான் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நீங்கள் அம்மன் கோவிலுக்கு செல்லும்போது அந்த கோவிலில் அமர்ந்து கண்களை மூடி ஆதிபராசக்தியை மனதார நினைத்து இந்த மந்திரத்தை சொல்லும் போது, உங்களுக்குள் ஒரு தைரியம் பிறக்கும். வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று அம்மனை நினைத்து பூஜை செய்யும்போது இந்த மந்திரத்தை சொல்லலாம்.
பெண்கள் மட்டும் தான் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டுமா என்று கேட்டால் அதுவும் கிடையாது. ஆண்களும் இந்த மந்திரத்தை சொன்னால், அவர்களுக்கு மன தைரியம் பிறக்கும். பராசக்தியின் அருள் ஆசியை நாம் பெற வேண்டும் என்றால் சொல்ல வேண்டிய எளிமையான மந்திரங்களில், மிக மிக சக்தி வாய்ந்த மந்திரங்களில் இதுவும் ஒன்று.
இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்க உதவும் நெய்வேத்தியம்
ஆடி வெள்ளி அம்மனுக்கு உரிய நாள். அந்த நாளில் ஆதிபராசக்தியை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள் நல்லது நடக்கும். வேண்டியது கிடைக்கும். அதேபோல ஆடி வெள்ளியில் ஒரு வெள்ளிக்கிழமை கட்டாயம் கோவிலுக்கு சென்று பச்சரிசி மாவில் மாவிளக்கு தயார் செய்து அதை அம்பாளுக்கு ஏற்றி வழிபாடு செய்யுங்கள் குடும்பத்தில் இருக்கும் சுப காரிய தடை விலகும். குடும்பம் சுபிட்சம் பெறும். ஆடி வெள்ளியில் இந்த சக்தி வாய்ந்த அம்பாள் வழிபாட்டை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சி அடைந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.