- Advertisement -
Homeமந்திரம்செல்வத்தை வாரி வழங்கும் விநாயகர் மந்திரம்

செல்வத்தை வாரி வழங்கும் விநாயகர் மந்திரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது பணம்தான். அதனால்தான் பணத்தை சம்பாதிப்பதற்காக நாம் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டு இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய பணம் நம்மிடம் தங்கவும், வருமானம் அதிகரிப்பதற்கும் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்வோம். இருப்பினும் ஒரு சிலருக்கு அது நிறைவேறாமல் சென்று விடும். அப்படிப்பட்டவர்கள் சங்கடஹர சதுர்த்தி நாளன்று கூற வேண்டிய விநாயகர் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

செல்வத்தை வாரி வழங்கும் மந்திரம்

நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்த்து நல்ல வாழ்க்கை அமைவதற்கு விநாயகப் பெருமானின் அருள் என்பது கண்டிப்பாக வேண்டும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை சங்கடஹர சதுர்த்தி நாளன்று வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் காணாமல் போகும் என்று கூட கூறலாம். அதிலும் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி என்பது செல்வ நிலையை அதிகரிக்க கூடிய அற்புதமான ஒரு நாளாகவே கருதப்படுகிறது. அன்றைய நாளில் நாம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பொதுவாக சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்பது சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு செய்யக்கூடிய ஒன்று. வீட்டிலே பலரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்வார்கள். இன்னும் சிலரோ அருகில் இருக்கக்கூடிய விநாயகரின் ஆலயத்திற்கு சென்று அங்கு வழிபாட்டை மேற்கொள்வார்கள். எங்கு வழிபாடு செய்தாலும் இந்த ஒரு மந்திரத்தை முழுமனதோடு விநாயகப் பெருமானை நினைத்துக் கொண்டு 11 முறை கூறினால் போதும். நம்முடைய வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த செல்வ தடைகள் அனைத்தும் நீங்கி செல்வம் அதிகரிப்பதை உணர முடியும்.

இந்த மந்திரத்தை மாலை 6 மணியிலிருந்து இரவு 11 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம். வீட்டில் கூறுபவர்களாக இருக்கும் பட்சத்தில் விநாயகப் பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறும்பொழுது விநாயகப் பெருமானுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைப்பது நல்லது. ஆலயத்திற்கு செல்பவர்களாக இருக்கும் பட்சத்தில் ஆலயத்தில் விநாயகர் பெருமானுக்கு தீபம் ஏற்றி அருகம்புல் மாலை சாற்றி அங்கேயே அமர்ந்து இந்த மந்திரத்தை கூறலாம்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் பால கணபதயே நமோ நமோ
செல்வ கணபதயே நமோ நமோ
லக்ஷ்மி கணபதயே நமோ நமோ”

இதையும் படிக்கலாமே:வைகாசி மாத பண வசிய மந்திரம்

எளிமையான இந்த மந்திரத்தை இரவு 11 மணிக்குள் 11 முறை விநாயகரை நினைத்து கூறுபவர்களுக்கு செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்