ஆயுசுக்கும் பணவரவு தடைபடாமல் இருக்க விநாயகருக்கு எந்த பொருளை தானமாகக் கொடுக்க வேண்டும்? இந்த ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சுக்க ஆசைப்படுகிறீர்களா?

vinayagar-compressed-1

வாழ்க்கையில் வரக்கூடிய எவ்வளவு பெரிய கஷ்டங்களாக இருந்தாலும் சரி அந்தக் கஷ்டங்களை தகர்த்தெறிய விநாயகர் வழிபாடு நமக்கு துணையாக நிற்கும். தடைகளைத் தகர்த்தெறிவதில் அந்த விநாயகருக்கு முதலிடம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. விநாயகரது மனதை குளிர வைத்து விட்டு, நாம் எந்த வரத்தினை கேட்டாலும், அந்த வரத்தை அள்ளித் தரும் அற்புத குழந்தை குணம் கொண்டவர் தான் இந்த விநாயகர். விநாயகரை எப்படி வழிபாடு செய்தால், நம் வீட்டில் செல்வ கடாக்ஷம் நிறைந்திருக்கும் என்பதைப் பற்றிய மிக மிக சுலபமான ஒரு சில ஆன்மிகத் தகவல்களை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

arugampul-vinayagar

செல்வ கடாட்சம் நம் வீட்டில் எப்போதும் நிலைத்திருக்க விநாயகருக்கு அருகம்புல் மல்லிகைப்பூ சேர்ந்த அர்ச்சனையை செய்யலாம். இந்த அர்ச்சனையை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் செய்து வந்தால், பண வரவில் இருக்கும் தடைகள் நீங்கி, வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க தொடங்கும். விநாயகரை மனம் குளிர வைக்க அருகம் புல்லுக்கு முதலிடம். இதோடு மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய மல்லிகைப்பூ சேரும் போது, நமக்கு இரட்டிப்பு பலனை விநாயகப் பெருமான் அள்ளி வழங்கி விடுவார். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

அடுத்தபடியாக தொழிலின் தடை, சம்பளம் பெறுவதில் தடை, கொடுத்த கடனை வசூல் செய்வதில் தடை, நல்ல வேலை கிடைப்பதில் தடை, வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதில் தடை, இப்படியாக நம்முடைய வீட்டில் எதைத் தொட்டாலும் தடைகள் வந்து கொண்டே இருக்கின்றது. இதற்கு என்ன செய்ய வேண்டும். விநாயகருக்கு அருகம்புல்லோடு அரளி பூ சேர்த்து அர்ச்சனை செய்து வர வேண்டும். இந்த அர்ச்சனையை வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் விநாயகருக்கு செய்தால் மிகவும் நல்லது.

arali

உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் படிப்படியாக குறையத் தொடங்கும். இந்த அர்ச்சனைகளை உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகருக்கு உங்கள் கையாளும் செய்யலாம் அல்லது கோவிலில் சென்று விநாயகருக்கு இந்த பொருட்களை வாங்கிக்கொடுத்து உங்கள் பெயர், நட்சத்திரம், சொல்லி அர்ச்சனை செய்து கொண்டால் மேலும் சிறப்பான பலனைக் கொடுக்கும்.

- Advertisement -

வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு வாழ்க்கையில் பண கஷ்டம் மட்டுமல்ல வேறு எந்த ஒரு கஷ்டமும் வரக்கூடாது. இதற்கு விநாயகர் வழிபாட்டை எப்படி செய்வது. கஷ்டம் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையே இனிமையாக மாறிவிடும். எந்த ஒரு வேலையை நீங்கள் தொடங்கினாலும், அதில் தாமதம் இருக்காது. தடைகள் இருக்காது. யாரையும் நம்பி ஏமாற மாட்டீர்கள். வெற்றியை மட்டுமே நீங்கள் காண வேண்டுமென்றால், அந்த விநாயகப் பெருமானை உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த முறைப்படி வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வாருங்கள். மிக மிக சுலபமான முறை தான்.

malligai poo

வாரம்தோறும் வரக்கூடிய புதன்கிழமை அன்று விநாயகர் கோவிலுக்கு சென்று, விநாயகர் வழிபாடு செய்துவர வேண்டும். இதோடு சேர்த்து விநாயகருக்கு புதன்கிழமை வெல்லம் தானமாக கொடுக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கலுக்கு சேர்க்கும் வெல்லம் இருக்கும் அல்லவா? மண்டை வெல்லம் என்று சொல்லுவார்கள். இதை உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு விநாயகர் கோவிலுக்கு தானமாக கொடுத்து வாருங்கள். அதை வைத்து அவர்கள் விநாயகருக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக செய்ய பயன்படுத்திக் கொள்வார்கள், அல்லது வேறு ஏதாவது ஒரு பயன்பாட்டிற்கு இந்த வெள்ளத்தை பயன்படுத்திக் கொண்டாலும் சரி தான், அது விநாயகரை போய் சேர்ந்து விடும்.

vellam

முடிந்தால் வெல்லம் நெய் முந்திரி பருப்பு ஏலக்காய் சேர்த்த சர்க்கரை பொங்கலை விநாயகருக்கு பிரசாதமாகப் படைத்து, கோவிலில் வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தாலும் உங்களது வாழ்க்கை இனிமையாக மாறும். முடியாதவர்கள் வெறும் வெல்லத்தை வாங்கி கோவிலில் இருக்கும் புரோகிதர் கையில் தானமாக கொடுத்து விடுங்கள் அதுவே போதும். அந்த வெல்லம் போல, உங்கள் வாழ்க்கை எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் இனிப்பாகவே செல்லும். வாழ்நாள் முழுவதும் வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் செழிப்பாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.