இந்த செடியை வீட்டிற்கு பின்னால் வைப்பதை விட முன்னால் வைத்து பாருங்கள்! கோடி பலன்கள் கிடைக்கும். என்ன செடி அது?

sembaruthi-leaf-lakshmi-cash

ஒவ்வொரு செடி வகைகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். சில செடி வகைகள் வாஸ்து ரீதியாகவும் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. வாஸ்து ரீதியாக இந்த செடியை இந்த இடத்தில் வைத்தால் நல்லது நடக்கும் என்பது போல் நிறைய குறிப்புகள் உள்ளன. அவ்வகையில் இந்த செடியானது வீட்டிற்கு பின்னால் வளர்ப்பதை விட, உங்கள் வீட்டிற்கு முன்னே அனைவரும் பார்க்கும் வண்ணம் வளர்த்து வந்தால் திருஷ்டிகள் நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம்.

sembaruthi

இந்த செடியை ஒவ்வொருவரின் வீட்டிலும் வளர்ப்பது பலகோடி பலன்களை தரும். வீட்டுக்குப் பின்னாலும் வளர்க்கலாம், தவறு இல்லை. எந்த தோஷமும் இல்லை. ஆனால் அதை விட சிறந்ததாக வீட்டிற்கு முன்னால் தலைவாசலுக்கு நேரெதிரே இல்லாமல் மற்ற ஓரங்களில் இருபுறத்திலும் ஏதாவது ஒரு இடத்தில் இந்த செடியை நீங்கள் நட்டு வளர்த்து விட்டால் போதும். வீட்டில் எப்போதும் செல்வ செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.

அதிலும் குறிப்பாக இந்த செடியை திருஷ்டி நீக்குவதற்கு பயன்படுத்துவதாக நிறைய குறிப்புகள் இருக்கின்றன. உங்கள் மேல் அல்லது உங்கள் வீட்டின் மேல் பொறாமை பிடித்தவர்கள் உங்கள் வீட்டை பார்க்கும் பொழுது முதலில் அவர்கள் கண்களுக்கு இந்த செடி தான் தெரிய வேண்டும். இந்த செடியில் இருக்கும் ஒவ்வொரு பூக்களும் கெட்ட சக்திகளை கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு காரணம் இந்த செடியில் இருக்கும் பசுமையும், அதன் பூக்களில் இருக்கும் அடர் நிறமும் ஆன்மீக ரீதியாக மற்றவர்களை வசியம் செய்வதற்கு ஏதுவானதாக இருக்கின்றன. சரி அப்படி என்ன செடி தான் அது? என்பதை பார்த்து விடுவோமா? பெரும்பாலான வீடுகளில் இந்த செடியை நிச்சயம் வளர்த்து வைத்திருப்பார்கள். அடர் சிகப்பு நிறம் கொண்ட ஐந்து இதழ்களை உடைய செம்பருத்தி செடி தான் அது. பெரிய பெரிய வீடுகளில் எல்லாம் வீட்டிற்கு முன்னால் இந்த வகையான செடியை தான் வளர்த்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மேற்கூறியவைகள் தான்.

- Advertisement -

அடுக்குமாடி கட்டிடங்களில் இருப்பவர்கள் நிச்சயம் இந்த செடியை வைத்தால் செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. வாடகை வீடு அல்லது சொந்த வீடு எதுவாக இருந்தாலும் நீங்கள் தாராளமாக குறைந்த இடத்திலேயே இந்த செடியை வளர்த்து விடலாம். மற்ற நிறங்களை காட்டிலும் அடர் சிகப்பு நிறத்தை கொண்டுள்ள செம்பருத்தி செடியை வளர்த்து வந்தால் சகல யோகங்களும் கிடைக்கும். தினமும் நிறைய பூக்கள் பூத்து குலுங்குவதை போல உங்களுடைய இல்லத்தில் மகிழ்ச்சியும் நிரம்பி வழியும்.

sembaruthi 2

அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த பூவாக செம்பருத்தி தனித்துவமான சிறப்பம்சத்தை கொண்டுள்ளது. செம்பருத்தி பூவை எந்த தெய்வத்திற்கு வேண்டுமானாலும் நீங்கள் படைத்து வழிபடலாம். ஒரே ஒரு செம்பருத்தி பூவை வீட்டில் இருக்கும் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் நிறைய நன்மைகள், நல்ல ஆற்றல்கள் பெருகும். செம்பருத்தி செடி ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் நிறைய பயன்களை கொண்டுள்ளது. அதில் இந்த அடர் சிகப்பு நிற செம்பருத்தி செடி மிகவும் சக்தி வாய்ந்தவை. இதனை வீட்டிற்கு முன் வளர்த்து நீங்களும் பயன் பெற்றுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
பர்ஸ், பணம் வைக்கும் இடத்தில் இந்த 5 ரூபாய் மட்டும் வைத்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.