1 கப் சேமியா இருந்தா போதும் அட்டகாசமான கிரிஸ்பியான மொறு மொறு போண்டா நாவூரும் சுவையில், அனைவரும் விரும்பும் வகையில் ரொம்பவே எளிதாக இப்படியும் செய்யலாமே!

semiya-bonda2
- Advertisement -

சேமியா இருந்தால் உப்புமா தான் கிண்டுவோம் ஆனால் சேமியாவை வைத்து போண்டா இப்படி ஒரு முறை நீங்கள் செஞ்சு பாருங்கள், எல்லோருமே ரொம்பவும் ரசிச்சு ருசிச்சு சாப்பிட போறாங்க! மாலை நேர சிற்றுண்டியாக இந்த போண்டாவை 10 நிமிடத்திற்குள்ளேயே செய்துவிடலாம். தேநீருடன் வைத்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். சூப்பரான சுவையில் மொறு மொறு சேமியா போண்டா எளிதாக செய்வது எப்படி? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம்.

சேமியா போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
சேமியா – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, நறுக்கிய கொத்தமல்லி தழை – அரைக் கைப்பிடி, நறுக்கிய புதினா இலைகள் – அரை கைப்பிடி, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், அரிசி மாவு – 2 டீஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன், கடலை மாவு – அரைக்கப், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

சேமியா போண்டா செய்முறை விளக்கம்:
சேமியா போண்டா செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு சேமியாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் சேமியாவை வேக வைப்பதற்கு ஏற்ப கொஞ்சம் போல் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். பின் தண்ணீர் கொதித்ததும் சேமியாவை போட்டு ரெண்டு நிமிடம் மட்டும் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள், குழைய விட்டு விட வேண்டாம்.

சேமியா வெந்ததும் தண்ணீரை வடிகட்டி சேமியாவை மட்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை உதிர்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய் பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். அரை கைப்பிடி அளவிற்கு பொடிப்பொடியாக நறுக்கிய மல்லி தழை மற்றும் அரை கைப்பிடி அளவிற்கு பொடி பொடியாக நறுக்கிய புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள், நல்ல ஒரு பிளேவர் கிடைக்கும்.

- Advertisement -

இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், தனி மிளகாய் தூள் ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்துக் கொள்ளுங்கள். போண்டா நல்ல கிரிஸ்பியாக மொறு மொறுவென்று வருவதற்கு இரண்டு ஸ்பூன் அரிசி மாவும் சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த அரிசி மாவாக இருந்தாலும் பரவாயில்லை. பின் கடலை மாவு சேர்த்து, தேவையான அளவிற்கு உப்பு போட்டு போண்டா மாவு போல நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை ஏற்கனவே சேமியாவில் இருக்கும் நீரின் ஈரப்பதமே போதுமானது.

இதையும் படிக்கலாமே:
இனி பிரியாணி சாப்பிடணும்னு முடிவு பண்ண இந்த மேத்தி பிரியாணியை ட்ரை பண்ணுங்க. இதன் வாசமே பத்து தெருவுக்கு வீசும், அப்புறம் டேஸ்ட் சொல்லவே வேண்டாம் அட்டகாசமா இருக்கும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக போண்டாவை உருட்டி அதில் போட்டு எல்லா புறமும் பொன்னிறமாக சிவக்க, அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து வறுத்துக் எடுக்கவும். ரொம்பவே எளிதாக செய்யக்கூடிய இந்த சேமியா போண்டா ரெசிபி ருசியிலும் அட்டகாசமாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்திடுங்க!

- Advertisement -