ஒரு காலத்தில் பிரியாணி என்பது எப்பொழுதாவது விஷேச நாட்களில் மட்டும் சாப்பிடும் உணவாக இருந்த காலம் போய், இன்று நினைத்த நேரமெல்லாம் சாப்பிடக் கூடிய உணவாக இந்த பிரியாணி மாறி விட்டது. இப்படி நினைத்த நேரம் எல்லாம் சாப்பிட முடிந்தாலும் கூட, இன்னமும் பிரியாணி என்றால் அதை ஒரு ஸ்பெஷல் உணவு என்கிற கண்ணோட்டத்தில் தான் நாம் பார்க்கிறோம். இதனால் தான் வகை வகையாக பிரியாணிகள் இப்போது பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இந்த கஸ்தூரி மேத்திக் கொண்டு செய்யப்படும் பிரியாணி நல்ல வாசனை உடன் பிரியாணிஏ தோற்றுப் போகும் வகையில் இதன் சுவை இருக்கும். இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ, பெரிய வெங்காயம் – 4, தக்காளி – 4, பச்சை மிளகாய் – 4 இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன், தனியாத்தூள்- 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு -1 டீஸ்பூன், கஸ்தூரி மேத்தி – 100 கிராம், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், நெய் -1 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி -1 கைப்பிடி,சோம்பு – 1 டீஸ்பூன், சீரகம் -1 டீஸ்பூன், பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை -2.
இந்த பிரியாணி செய்ய கஸ்தூரி மேத்தி இலைகளை தண்ணீரில் போட்டு அலசி நன்றாக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிரியாணி அரிசியை தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது மேத்தி பிரியாணி தாளித்து கொள்ளலாம். அதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு குக்கரை வைத்து விடுங்கள். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்த உடன், சோம்பு போட்டுக் கொள்ளுங்கள் அதன் பிறகு எடுத்து வைத்த மசாலா பொருட்களை சேர்த்து விடுங்கள். மசாலா பொருட்கள் பொரிந்தவுடன் நீளமாக அறிந்த வெங்காயத்தையும் இதில் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டாம், அதன் பிறகு தக்காளியும் சேர்த்து அதையும் வதக்கிய பிறகு, மிளகாய் தூள்,தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்த பிறகு ஊற வைத்து அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து அதையும் இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு அலசி எடுத்து வைத்த கஸ்தூரி மேத்தியையும், பொடியாக அரிந்த கொத்தமல்லியும் சேர்த்து ஒரு நிமிடம் இந்த அரிசியுடன் சேர்த்து அனைத்தையும் கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது அரை கிலோ அரிசியை எந்த பாத்திரத்தில் அளந்தீர்களோ அந்த பாத்திரத்தில் ஒன்றரைக் கப் அளவிற்கு தண்ணீர் வைத்து குக்கர்ரை முடி விடுங்கள். குக்கர் மூன்று விசில் வரும் வரை வைத்து விடுங்கள்.
குக்கர் மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு விசில் இறங்கியவுடன் மூடி திறந்து சாதத்தை உடையாமல் லேசாக கிளறி மறுபடியும் கொஞ்சம் புதினா தழைகளை சேர்த்து நெய்யை ஊற்றி கலரி பரிமாற வேண்டியதுதான் சுவையான கஸ்தூரி மேத்தி பிரியாணி ரெடி.