பிடிக்காத சேமியா உப்புமாவை இப்படி செஞ்சு கொடுத்து பாருங்க, நல்லா தானே இருக்கு இன்னும் கொஞ்சம் போடுங்கன்னு சொல்லுவாங்க!

semiya-upma-peanuts
- Advertisement -

சேமியா உப்புமா மட்டுமல்ல உப்புமா என்றாலே யாருக்கும் பிடிப்பதில்லை! இதற்கு காரணம் அதை சரியான முறையில் செய்யாதது ஆகும். ருசியாக சேமியா உப்புமா செய்து கொடுத்தால், தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி உடன் தொட்டுக்க அவ்வளவு அருமையாக இருக்கும். இதையா வேண்டாம் என்று சொல்லும் என்று நினைக்கும் அளவிற்கு சூப்பரான சேமியா உப்புமா ரொம்பவே எளிதாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சேமியா உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
ரோஸ்டட் சேமியா – ஒரு பாக்கெட், பெரிய வெங்காயம் – ஒன்று, நெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, கருவேப்பிலை – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், தோலுரித்த வேர்க்கடலை – அரைக்கப், முந்திரிப் பருப்பு – 10, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

சேமியா உப்புமா செய்முறை விளக்கம்:
முதலில் சேமியா உப்புமா செய்வதற்கு ஒரு பாக்கெட் ரோஸ்டட் சேமியா தேவை. வறுக்காத சேமியாவாக இருந்தால் நீங்கள் ஒரு முறை ஒரு ஸ்பூன் நெய் விட்டு மிதமான தீயில் வைத்து வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளலாம். தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயம் ஒன்றை தோல் உரித்து மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மீதி எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு வாணலி ஒன்றை வைத்து அதில் தேவையான அளவிற்கு நெய் விட்டு நங்கு காய விடுங்கள். நெய் காய்ந்ததும் அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்திடும் போது, உளுந்து மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு வறுத்து வைத்துள்ள தோல் உரித்த வேர்கடலை மற்றும் முந்திரி பருப்புகளை உடைத்து சேருங்கள்.

- Advertisement -

எல்லா பருப்பு வகைகளும் பொன்னிறமாக சிவக்க வறுபட்டதும், நீங்கள் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு கொத்து கழுவி உருவிய கருவேப்பிலை மற்றும் அதனுடன் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காய துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். எவ்வளவு வதக்க முடியுமோ, அவ்வளவு வதக்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்க வேண்டும். பின்னர் எல்லாம் மசிந்தததும் சேமியா மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். அதற்கு மேல் தண்ணீர் சேர்க்கக்கூடாது. தண்ணீர் கொதித்து வரும் பொழுது அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் நீங்கள் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு வேக விடுங்கள். இதில் காய்கறி எல்லாம் நறுக்கி சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். மூடி போட்டு வேக வைத்தால் ஐந்து நிமிடத்தில் தண்ணீர் எல்லாம் உறிந்து உதிரி உதிரியான உப்புமா ரெடி ஆகி இருக்கும். அதை ஒரு முறை நன்கு கலந்து விட்டு மீண்டும் மூடி போட்டு வேக விட்டு நன்கு மேலோட்டமாக கலந்து விட்டு பாருங்கள். பொலபொலன்னு சூப்பரான சுவையான சேமியா உப்புமா ரொம்பவும் சுலபமாக தயாராகும். நீங்கள் இதே மாதிரி செஞ்சு பயன்பெறுங்க.

- Advertisement -