சேனைக்கிழங்கை இப்படி ஒரு முறை கிறிஸ்பியா ரோஸ்ட் செய்து கொடுத்துப் பாருங்க. நீங்க செஞ்சு வச்ச உடனே காலி ஆயிடும். இந்த சேனைக்கிழங்கு ரோஸ்ட்டுக்கு முன்னாடி சிக்கன்னே தோத்து போயிடும்னா பாருங்களேன்.

senai kizhzhangu
- Advertisement -

சேனைக் கிழங்கை வைத்து பல வகை உணவுகளை சமைக்கலாம்.  சேனைக்கிழங்கை வைத்து மீன் போன்ற வறுவல், ரோஸ்ட் போன்றவை எல்லாம் செய்து கொடுத்தால் அப்படியே அசைவ சுவையிலே இருக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சுவையான சேனைக்கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த ரோஸ்ட் செய்வதற்கு முதலில் சேனைக்கிழங்கு அரை கிலோ எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் தோல்களை எல்லாம் நீக்கி சுத்தம் சுத்தம் செய்த பிறகு தண்ணீரில் ஒரு முறை அலசி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சேனைக்கிழங்கை அதில் சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து அந்த புளி தண்ணீரையும் ஊற்றிய பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து சேனைக்கிழங்கு பாதி வேகும் வரை விட்டு அடுப்பை அணைத்து விட்டுங்கள். அதன் பிறகு தண்ணீரில் இருந்து சேனைக்கிழங்கை எடுத்து வடிஜல்லியில் போட்டு தனியாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஐந்து டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு வேக வைத்து சேனைக்கிழங்கை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்து பின் எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்து விடுங்கள். இதன் மூலம் சேனைக்கிழங்கு நல்ல கிறிஸ்பியாக மாறி விடும்.

அடுத்ததாக சேனைக் கிழங்கு பொரித்தெடுத்த அதே எண்ணெயில் கால் டீஸ்பூன் கடுகு அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிந்த பிறகு இரண்டு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி ஒரு கொத்து கறிவேப்பிலையும் சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு பொரித்து வைத்த சேனைக்கிழங்கை இதில் சேர்த்து அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலா, கால் டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து விட்டு ஐந்து நிமிடம் வரை நன்றாக கலந்து விடுங்கள். அருமையான சேனைக்கிழங்கு ரோஸ்ட் தயார்.

இதையும் படிக்கலாமே: கேரளா பேமஸ் கடலை கறி செய்முறை(kerala special Kadalai curry Recipe in Tamil)

இந்த சேனைக்கிழங்கு ரோஸ்ட் தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் என எதற்கு வைத்து சாப்பிட்டாலும் பிரமாதமாக இருக்கும். நீங்களும் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க உங்க குழந்தைகள் மறுபடியும் இதே போல் செய்து தர சொல்லி கேட்டு அடம் பிடிப்பாங்க.

- Advertisement -