அசல் கேரளா பேமஸ் கடலைக்கறி சாப்பிடணும்னா இந்த மசாலாவை அரைச்சு ஊத்தி செய்ங்க. இனி ஆப்பம் புட்டு மட்டும் இல்ல வீட்ல எந்த டிபன் செஞ்சாலும் அதுக்கு இந்த கடலை கறி தான் சைடிஷ் ஆக செய்வீங்க .

- Advertisement -

கேரளாவின் பேமஸ் கடலை கறியை நம்மளும் அதே சுவை மணம் மாறாமல் செய்யணும்னா அதுக்கு இந்த ஒரு மசாலா மட்டும் அரைச்சு சேர்த்த போதும். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் அந்த மசாலாவை எப்படி அரைத்து ஊற்றி கடலை கறி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த கடலை கறி செய்வதற்கு 1 கப் கருப்பு கொண்டை கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக அடுப்பில் குக்கர் வைத்து 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் இஞ்சி பூண்டை நசுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு 2 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன், 2 தக்காளி நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இவை இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு ஊற வைத்த கொண்டகடலையை சேர்த்து கடலை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரை 6 விசில் வரும் வரை விட்டு விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது கடலை கறிக்கு தேவையான மசாலாவை அரைத்துக் கொள்வோம். அதற்கு அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிய பிறகு அதில் 1 துண்டு பட்டை, 2 ஏலக்காய், 2 கிராம்பு சேர்த்த பிறகு 10 சின்ன வெங்காயம், 1கப் துருவிய தேங்காய் சேர்த்துக் இவை எல்லாம் லேசாக வதங்கிய பிறகு 2 டீஸ்பூன் தனியா தூள் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், எல்லாம் சேர்த்து அடுப்பை லோ ஃபிளேமில் வைத்துப் தேங்காய் சிவந்து வரும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இவை எல்லாம் ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நல்ல பைன் பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த நேரத்திற்குள்ளாக குக்கர் விசில் முழுவதுமாக இறங்கி இருக்கும். இப்போது குக்கர் விசிலை எடுத்து விட்டு மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து அரைத்து வைத்த மசாலா பேஸ்ட்டை இதில் சேர்த்து 1/4 டீஸ்பூன் உப்பையும் சேர்த்து இரண்டு நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பூண்டு தொக்கு செய்வது எப்படி? ( Garlic Thooku Recipe Tamil)

கடைசியாக இந்த கடலை கறியை தாளித்து ஊற்றுவதற்கு பதிலாக 1 கைப்பிடி கொத்துமல்லி, 1 துண்டு இஞ்சி இரண்டையும் பொடியாக நறுக்கி மேலே தூவி ஒரு பச்சைமிளகாயும் கீறி சேர்த்து , லேசாக தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பை அணைத்து  குக்கர் போட்டு மூடி விடுங்கள். அவ்வளவு தான் நல்ல மணக்க மணக்க அசல் கேரளா கடலை கறி தயார்.

- Advertisement -