சென்சிடிவ் மற்றும் டேமேஜ் சருமத்திற்கு கடலை மாவு பேக் போட்டால் இப்படித்தான் போடணும்! 10 நிமிடத்தில் நம்ம முகமா? இதுன்னு நீங்களே வியப்பீங்க!

kadalai-maavu-face
- Advertisement -

எல்லோருக்கும் மிருதுவான சூப்பர் ஸ்கின் இருக்கும் என்று கூறி விட முடியாது. பலருக்கும் இங்கு சென்சிடிவ் மற்றும் டேமேஜ் சருமம் தான் இருக்கிறது. மென்மையாக இருக்கக்கூடிய சருமம் கொண்டவர்கள், அடிக்கடி முகத்தை அழுத்தம் கொடுத்து துடைக்க கூடாது, டவலால் ஒற்றி தான் எடுக்கணும். இவர்கள் கடலை மாவு போக் போட்டால் எப்படி போடுவது சிறந்த பலனை கொடுக்கும்? 10 நிமிடத்தில் ஆச்சரியப்படுத்தும் பேஸ் பேக் ரிசல்ட் எப்படி இருக்கும்? என்கிற அழகு குறிப்பு தகவல்களை இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கடலை மாவு ஃபேஸ் பேக் போடுபவர்கள் வெறும் கடலை மாவினை அப்ளை செய்தாலே போதுமானது. இது எல்லா வகையான சருமத்தினருக்கும் பொருந்தக்கூடிய ஒரு அழகு பொருளாக இருக்கிறது. மேலும் ஆண்கள், குழந்தைகளுக்கு கூட கடலை மாவு ஃபேஸ் பேக் போட்டு விடலாம். அந்த அளவிற்கு சருமத்தை இறுக செய்து, பளிச்சிடும் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள கடலை மாவு உதவுகிறது.

- Advertisement -

கடலை மாவை பொறுத்தவரை கடையில் வாங்காமல் நாம் வீட்டிலேயே தரமானதாக வாங்கி அரைத்து வைத்துக் கொள்வது ரொம்பவே நல்லது. சென்சிடிவ் மற்றும் டேமேஜ் சருமம் கொண்டவர்கள் அவ்வளவு எளிதாக எல்லா பொருட்களையும் வைத்து ஃபேஸ் பேக் போட முடியாது. சிலருக்கு ஒரு விதமான அலர்ஜியை உண்டாக்கி விடக்கூடிய ஆபத்தும் இதில் நிறைந்துள்ளது.

சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள், கரடு முரடாக டேமேஜ் சருமம் கொண்டவர்கள் கடலை மாவு ஃபேஸ் பேக் போடும் பொழுது ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு ஒரு பவுலில் கடலை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் ஸ்பூனுக்கும் குறைவாக மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆண்களாக இருந்தால் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் கெட்டியான தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பேஸ்ட்டை நெற்றி, தாடை, கண்ணம் போன்ற எல்லா பகுதிகளிலும் நன்கு மசாஜ் செய்து விடுங்கள். பின்பு தின் லேயராக இல்லாமல், கெட்டியாக எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான லேயரில் பூசிக் கொள்ளுங்கள். பின்னர் 10 நிமிடம் நன்கு உலர விட்டு விடுங்கள். பத்து நிமிடத்தில் இது முழுமையாக உலர்ந்து இருக்காது, முக்கால் பாகம் தான் உலர்ந்து இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
1 ஸ்பூன் பேக்கிங் சோடா இருந்தால் இவ்வளவு விஷயங்களை செய்ய முடியுமா? அழகு குறிப்பில் பேக்கிங் சோடாவின் வியக்க வைக்கும் 8 குறிப்புகள் இதோ!

இந்த சமயத்தில் நீங்கள் முகத்தை லேசாக மசாஜ் செய்ய வேண்டும், எனவே கைகளை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மசாஜ் செய்ய ஆரம்பியுங்கள். நெற்றியில் இருந்து வட்ட வடிவில் ரொட்டேட் செய்தபடி மசாஜ் செய்யுங்கள். அதேபோல எல்லா இடங்களிலும் மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக கண்களுக்கு கீழே இருக்கும் பகுதிகளில் லேசான மசாஜ் செய்யுங்கள். தாடை பகுதிகளில் கூட உதடுக்கு கீழே அழுத்தி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதுபோல ரொட்டேட் செய்து மசாஜ் செய்யும் பொழுது இறந்த செல்கள் வெளியேறி, ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் முகம் பளிச்சென்று பளபளன்னு இன்ஸ்டன்டாக உங்களுக்கு க்ளோ செய்து கொடுக்கும். அது மட்டும் அல்லாமல் வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள், மெல்லிய முடிகள் கூட இதனால் அகன்று விடும். நம்ம முகமா இது? என்று பாக்குறதுக்கு அப்படி ஒரு அம்சமா இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -