இந்த ஒரு விஷயத்தை உங்க முகத்தில் செய்தால் 10 வயது குறைந்தது போல உங்களுக்கே ஃபீல் ஆகும்! சென்சிடிவ்வான ஸ்கின், பரமரிப்பது எப்படி?

face-honey-olive-pack
- Advertisement -

நம்முடைய முகம் ரொம்பவும் சென்சிடிவ் ஆனது. மிருதுவான தோல் அமைப்பு கொண்டுள்ள முகம் ஆனது வெகு விரைவாகவே எதையும் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது. முகத்தில் எப்பொழுதும் ஈரப்பதமும், சுத்தமும் இருந்தால் தான் என்றென்றும் 16 போல இளமையாக இருக்க முடியும். உங்களுடைய சருமம் 10 வயது குறைந்தது போல இளமையான தோற்றத்துடன் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது தான்! வாருங்கள் பதிவில் தொடர்ந்து பார்ப்போம்.

முகத்தை அடிக்கடி கைகளை கொண்டு தொடக்கூடாது. கைகளில் இருக்கும் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், நம்முடைய சரும ஆரோக்கியத்தை பாதித்துவிடும். இதனால் முகத்தில் பருக்கள் உண்டாவது, தடிப்புகள், வீக்கம், புள்ளிகள் ஆகியவை தோன்றுவது போன்ற பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பிக்கும். வெளியில் எங்காவது சென்று வந்து விட்டால் கண்டிப்பாக முகத்தை ஒருமுறை சாதாரண தண்ணீரால் கழுவி கொள்வது நல்லது.

- Advertisement -

அதிக அளவு செயற்கை அழகு பொருட்களை பயன்படுத்துபவர்களும், சுத்தமாக எந்த ஒரு அழகு பொருட்களையும் பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கும் விரைவாகவே இளிமையான தோற்றம் போய் முதிர்ந்த தோற்றம் வந்துவிடும். நம் உடம்பைப் போலவே முகத்திலும் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி மசாஜ் செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும், இதன் மூலம் முகம் எப்பொழுதும் பொலிவாக இருக்கும். மசாஜ் செய்வதற்கு முன் கைகளையும், முகத்தையும் கழுவிக் கொள்ளுங்கள்.

இயற்கையான பொருட்களைக் கொண்டு அவ்வபோது முகத்திற்கு ஒரு சிறிய பேக் போட்டுக் கொள்வது ரொம்பவே ஆரோக்கியமானது. அப்போது தான் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் அவ்வபோது நீங்கி புதிய செல்கள் உருவாகத் துவங்கும். இதனால் முகம் ஆனது சோர்வுறாமல் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கும். வீட்டில் பெண்கள் காய்கறி அல்லது பழங்கள் நறுக்கி கொண்டிருக்கும் பொழுது, அதில் இருக்கும் சாற்றை சிறிதளவு முகத்தில் பூசிக் கொண்டு வேலை பார்க்க வேண்டும். இதனால் முகத்திற்கு தனியாக நேரம் செலவழிக்காமல் பராமரித்துக் கொள்ள முடியும்.

- Advertisement -

தக்காளி, உருளைக்கிழங்கு, பப்பாளி, கேரட், ஆப்பிள், பால், தயிர், எலுமிச்சை, வாழைப்பழம், பீட்ரூட் என்று சரும பராமரிப்பிற்கு உரிய அத்தனை பொருட்களும் நம்முடைய சமையல் அறையிலேயே இருக்கின்றனது. அதை நறுக்கும் போது சிறிதளவு சாற்றை எடுத்து முகத்தில் தடவி உலர விட்டால் போதும், முகம் எப்பொழுதும் இளமையாக இருக்கும். பீட்ரூட், வெள்ளரி சாறு போன்றவற்றை உதட்டின் மீது தடவி வந்தால் உதடு கருமை மாறி ஈரப்பதத்துடன் நல்ல நிறம் கொடுக்கும்.

உங்கள் வயதுக்கு உரிய சருமம் இல்லாமல் தொங்கிப் போய் பொலிவற்றதாகவும் இருந்தால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் நாலைந்து சொட்டுக்கள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட் போல கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முகம் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு 15 லிருந்து 20 நிமிடம் அப்படியே நன்கு உலர விட்டு விட வேண்டும். நன்கு உலர்ந்து இறுகும் பொழுது முகத்தை ஈர துணியால் துடைத்து எடுத்து பாருங்கள், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். இது போல வாரம் இரண்டு முறை செய்து வந்தாலே 2 மாதத்தில் நீங்கள் இழந்த பொலிவை மீண்டும் பெற்றுவிடலாம். பத்து வயது குறைந்தது போல பொலிவான தோற்றத்தை கொடுக்கக்கூடிய இந்த சூப்பரான டிப்ஸ் எந்த வகையான சருமத்தினருக்கும் பொருந்தக்கூடியது என்பதால் கவலைப்பட வேண்டியதில்லை. பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

- Advertisement -