- Advertisement -
Homeஆன்மீக குறிப்புகள்செவ்வாய் தோஷம் பரிகாரம் கோயில் | Sevai thosam pariharam temple in Tamil

செவ்வாய் தோஷம் பரிகாரம் கோயில் | Sevai thosam pariharam temple in Tamil

- Advertisement -

செவ்வாய் தோஷம் பரிகாரம் கோவில்கள்

ஒரு நபரின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் என்பது அவர் பிறந்த லக்கினத்திற்கு 1,2,4,7,8,12 ஆகிய வீடுகளில் ஏதேனும் ஒன்றில் இருப்பின் அதைச் செவ்வாய் தோஷம் கொண்ட ஜாதகமாக ஜோதிட சாஸ்திரத்தில் கருதப்படுகின்றது. செவ்வாய் தோஷம் கொண்ட ஜாதகர்களுக்கு விரைவில் திருமண வாழ்க்கை அமையாத நிலை ஏற்படுகிறது. எனவே இத்தகைய செவ்வாய் தோஷம் கொண்ட ஜாதகர்கள் தங்களின் தோஷங்கள் நீங்க செல்ல வேண்டிய செவ்வாய் தோஷம் பரிகாரம் கோயில்கள் (Sevai thosam pariharam temple in Tamil) குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் தோஷம் நீங்க கோயில்

ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதான பரிகார கோவிலாக விளங்குவது மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கின்ற வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் ஆகும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் திருக்கோவிலுக்கு வந்து கோயில் குளத்தில் நீராடிய பிறகு, புத்தாடைகளை அணிந்து கோயில் வளாகத்தில் இருக்கின்ற அரச மரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதர் சன்னதிகளுக்கு சென்று அந்த தெய்வங்களை வழிபாடு செய்த பிறகு, அந்த சந்நிதியை வலம் வந்து வணங்க வேண்டும்.

- Advertisement -

பிறகு கோவிலின் தெய்வங்களான வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி மற்றும் செவ்வாய் அம்சம் கொண்ட முத்துக்குமார சுவாமி எனும் பெயரில் உள்ள முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். பின்பு இக்கோயிலின் தனி சன்னதியில் இருக்கின்ற செவ்வாய் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்து செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தங்களின் பெயர், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை கூறி அர்ச்சனை செய்து வழிபாடு, செய்த பிறகு கோயிலுக்கு வெளியில் இருக்கின்ற யாசகர்களுக்கு துவரை சாதத்தை அன்னதானம் செய்வதால் ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறைந்து நன்மையான பலன்கள் ஏற்படும்.

செவ்வாய் தோஷம் பரிகாரம் கோயில்

பொதுவாக நவக்கிரக திருத்தலங்கள் சிவன் கோயில்களை மையப்படுத்தியே இருக்கும் என்றாலும் பெருமாள் கோவில்களை மையப்படுத்திய நவகிரக கோவில்களும் தமிழ்நாட்டில் உண்டு. அதில் செவ்வாய் கிரகத்திற்குரிய பரிகார தலமாக உள்ள வைணவ கோயில் தூத்துக்குடி மாவட்டம் திருக்கோளூர் அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் கோயில் திகழ்கிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த திருக்கோளூர் அருள்மிகு வைத்தமாநிதி கோயிலின் மூலவர் தெய்வமான திருமால் வைத்தமாநிதி என்கிற பெயரிலும், தாயார் குமுதவல்லி என்கிற பெயரிலும் அருள்பாளிக்கின்றனர்.

- Advertisement -

கோயிலில் உள்ள பெருமாள் நவக்கிரகத்தில் செவ்வாய் பகவானின் அம்சமாக திகழ்கிறார். எனவே ஜாதகத்தில் இருக்கின்ற செவ்வாய் தோஷம் அமையப்பெற்ற ஆண்களும், பெண்களும் தங்களின் வாழ்க்கையில் திருமண யோகம் கிடைக்க செவ்வாய் கிழமையில் இக்கோயிலுக்கு வந்து பெருமாளையும் தாயாரையும் வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதால் விரும்பிய பலன்களை பெற முடியும்.

ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற கடுமையான செவ்வாய் தோஷம் காரணமாக திருமண வாழ்க்கை அமையப் பெறாமல் தவிக்கின்ற ஆண்களும், பெண்களும் தங்களின் செவ்வாய் தோஷம் நீங்க செல்ல வேண்டிய செவ்வாய் தோஷ பரிகாரத்தலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கின்ற திருநறையூர் அருள்மிகு நாச்சியார் கோயில் திகழ்கிறது.

இதையும் படிக்கலாமே: ராகு கேது தோஷம் பரிகாரம்

கோயிலின் மூலவர் தெய்வமான திருமால், நறையூர் நின்ற நம்பி என்கிற பெயரிலும், தாயார் வஞ்சில வள்ளி என்கிற பெயரிலும் அருள் பாலிக்கின்றனர். தொடர்ந்து 48 தினங்கள் இந்த பெருமாளையும், அம்பாளையும் வழிபாடு செய்து, கோயிலை வலம் வந்து வழிபாடு செய்பவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற செவ்வாய் தோஷம் நீங்கி விரைவில் திருமண யோகம் அமையும் என அனுபவம் வாய்ந்த ஆன்மிக பெரியோர்கள் தெரிவிக்கின்றனர்.

சற்று முன்