ராகு கேது தோஷம் பரிகாரம்

rahu ketu dosham pariharam in tamil
- Advertisement -

நவகிரகங்களில் மற்ற எல்லா கிரகங்களை காட்டிலும் மிகவும் ஆற்றல் வாய்ந்த கிரகங்களாக ராகு, கேது கிரகங்கள் கருதப்படுகின்றன. ஒருவரின் ஜாதகத்தில் எவ்வளவு யோகங்கள் இருந்தாலும் இந்த ராகு கேது கிரகங்கள் அந்த ஜாதகத்தில் நல்ல நிலையில் இடம்பெறவில்லை என்றால், எந்த ஒரு யோகத்தையும் அந்த ஜாதகர் அனுபவிக்க முடியாமல் போய்விடும். எனவே ஒருவரின் ஜாதகத்தில் சக்தி வாய்ந்த இந்த ராகு – கேது கிரக தோஷங்கள் ஏற்பட்டிருப்பவர்களும், ராகு கேது கிரகங்களால் வாழ்வில் நன்மையான பலன்களை பெற விரும்புபவர்களும் செய்ய வேண்டிய ராகு கேது தோஷம் பரிகாரம் (Rahu ketu dosham pariharam in Tamil) குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது தோஷம் தீர பரிகாரம்

உங்கள் வீடுகளில் வடமேற்கு அல்லது தென்கிழக்கு ஆகிய இரண்டு திசைகளில் ஏதேனும் ஒரு இடத்தில் சிறிய கிண்ணத்தில் பறவைகள் உண்பதற்கான தானியங்களும் மற்றொரு கிண்ணத்தில் பறவைகள் தாகத்தை தீர்த்துக் கொள்வதற்கான நீரையும் வைப்பதால், பறவைகள் உணவை உண்டும், நீரை அருந்தியும் செல்வதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற ராகு கேது கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.

- Advertisement -

வாரந்ததோறும் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற பாம்பு புற்று இருக்கும் கோயிலுக்கு சென்று புற்றுக்கு வாசனை மிகுந்த பூக்களை சாற்றி, மஞ்சள் மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி ஒன்பது முறை வலம் வந்து வணங்குவதாலும், அதே செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பூஜையறையில் அமர்ந்து கோளறு திருப்பதிகம் போன்ற மந்திர ஸ்தோத்திரங்களை துதிப்பதாலும் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கின்ற ராகு கேது கிரக தோஷங்களின் தீவிர தன்மை குறைந்து நற்பலன்கள் ஏற்படும்.

ராகு கேது தோஷங்கள் நீங்க வாழ்வில் மேலான பலன்களை பெற வேண்டும் என நினைப்பவர்கள் எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற தேய்பிறை செவ்வாய்க்கிழமை தினத்தன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்று, செவ்வாய்க்கிழமை ராகு கால நேரமான மதியம் மூன்று 3 முதல் 4 . 30 குள்ளான நேரத்தில் அங்கிருக்கிற ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து, முறையான ராகு தோஷ நிவர்த்தி பூஜை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதேபோன்று எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற தேய்பிறை சனிக்கிழமை தினத்தன்று கும்பகோணம் அருகே இருக்கின்ற திருப்பாம்புரம் அருள்மிகு திருப்பாம்புரநாதர் கோயிலுக்கு சென்று, கேது பகவானுக்கு காலை 9 மணிக்குள்ளாக கேது கிரக தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். மேற்சொன்ன இரண்டு பரிகாரிகளையும் முறைப்படி செய்வதால் ஜாதகத்தில் ராகு கேது கிரக தோஷங்கள் நீங்கி நன்மையான பலன்கள் வாழ்வில் ஏற்படும்.

ஒருவருக்கு ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற ராகு கேது கிரக தோஷங்கள் நீங்க பிறருக்கு தானங்கள் வழங்க வேண்டும். தேயிலை, ஹோம பூஜைக்கு தேவையான பொருட்கள், தூப குச்சிகள், கருப்பு மற்றும் வெள்ளை நிற போர்வைகள், தலைக்கு தேய்த்து குளிக்கும் சீயக்காய் போன்றவை ராகு பகவானுக்கு உரியவை என்பதால் மேற்சொன்ன பொருட்களை ஏழை எளிய மக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தானம் செய்வதால் ராகு கிரகத்தின் தோஷம் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: இதையும் படிக்கலாமே: மாந்தி பரிகாரம்

அதே போன்று கேது கிரகத்தின் தோஷம் நீங்க வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தாலான ஆடைகள், கம்பளிப் போர்வைகள் போன்றவற்றை வயதானவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். நெல்லிக்காய், மாங்காய், ஊறுகாய்கள் போன்றவற்றையும் அந்தணருக்கோ அல்லது ஏழை எளிய மக்களுக்கோ தானம் செய்யலாம். தெருவில் இருக்கின்ற நாய்களுக்கு பிஸ்கட் மற்றும் இன்ன பிற உணவுகளை கொடுப்பதாலும் கேது கிரகத்தால் ஏற்படுகின்ற தோஷம் நீங்கும்.

- Advertisement -