உங்களுக்கு வீடு, நிலம் போன்ற சொத்துகள் அதிகரிக்க இம்மந்திரம் துதியுங்கள்

sevvai

அங்காரகன் என்பது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் ஒரு சொல்லாகும். நவகிரகங்களில் செவ்வாய் கிரகம் என்பது ஒரு மனிதனின் ரத்தம், தைரிய குணம், சொந்த வீடு, நிலம் போன்றவற்றுக்கு காரகத்துவம் வகிக்கிறது. இந்த செவ்வாய் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை எட்டும் போது அவருக்கு செவ்வாய் திசை, செவ்வாய் தோஷங்கள் போன்றவை ஏற்படுகின்றன. இதனால் மேற்கூறிய நற்பலன்கள் ஜாதகருக்கு கிடைப்பதில் தடைகள், தாமதங்கள் உண்டாகின்றன. அவை எல்லாவற்றையும் நமக்கு கிடைக்கச் செய்யும் அற்புதமான செவ்வாய் மூல மந்திரம் இதோ

sevvai

அங்காரகள் / செவ்வாய் மூல மந்திரம் :

ஐம் ஹ்மெளம் ஸீம்த்ராம் கம் க்ரஹாதிபதயே
பெளமாய ஸ்வாஹா

அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்குரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 9, 27, 108 முறை துதிப்பது சிறந்தது. செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்களை சமர்ப்பித்து, தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 துதித்து வருவதால் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதகங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகாமல் தடுக்கும். வெகு சீக்கிரத்தில் சொந்த வீடு மற்றும் சொந்தமாக நிலம் போன்ற அசையா சொத்துகள் வாங்குவதற்கான யோகத்தை ஏற்படுத்துவார் செவ்வாய் பகவான்.

chevvai bagwan

செவ்வாய் பகவான் பரிகாரங்கள்:

- Advertisement -

செவ்வாய் பகவானின் முழுமையான அருளைப் பெறுவதற்கு ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுக்கு சென்று, சிவபெருமான், பார்வதிக்கு அபிஷேக அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் செவ்வாய் பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். இந்த பரிகார வழிபாட்டை ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செய்வது சிறப்பு.

Thiruverumbur sivalingam

மேற்கூறிய பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டுற்க்கு அருகிலேயே இருக்கும் சிவன் கோயிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதிக்கு செவ்வாய் கிழமைகளில் காலை 9 லிருந்து 10 மணிக்குள்ளாக சென்று, செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்களை சாற்றி, சிறிது துவரம் பருப்புகளை சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி செவ்வாய் பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறை 1008 வரை துதிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை 9 முதல் 27 வாரங்கள் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும்.

chevvai

இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய இயலாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் இருக்கும், பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, முருக மந்திரங்களை 108 எண்ணிக்கை வரை துதிப்பதால் செவ்வாய் பகவானின் அருள் கிட்டும். உங்களின் இடது கையில் தரமான செம்பு வளையம் ஒன்றை செவ்வாய்க்கிழமையில் அணிந்து கொள்ள வேண்டும். கோயில்களில் சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடைபெறும் காலத்தில் கோயில் பூஜைகளுக்கு செந்நிற மலர்கள் மற்றும் துவரம் பருப்புகளை தானமாக தரலாம். ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், காவல் துறையினர் போன்றோர்களின் நலன்களுக்கான விடயங்களுக்கு உங்கள் சக்திக்கேற்ப நிதி அளிப்பது செவ்வாய் பகவானின் நல்லருளை உங்களுக்கு பெற்றுத்தரும் சிறந்த பரிகாரமாக காரணமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
விரும்பியவற்றை தரும் குரு மூல மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we Sevvai Moola mantra in Tamil. This mantra is also called as Sevvai manthiram in Tamil or Sevvai bhagavan mantra in Tamil or Moola mantras in Tamil or Sevvai graha manthiram in Tamil.