செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 ஜூன் 22 முதல்- 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

sevvai
- Advertisement -

ஒரு மனிதனின் தைரிய உணர்வுக்கும், பூமி, வீடு, சகோதரன் ஆகியவற்றிற்கும் காரகனாக நவகிரகங்களில் செவ்வாய் பகவான் இருக்கிறார். அந்த செவ்வாய் பகவான் ஜூன் மாதம் 22 ஆம் தேதி இரவு 11. 48 மணியளவில் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். அந்த செவ்வாய் பகவானின் பெயர்ச்சியால் 12 ராசியினருக்குமான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

- Advertisement -

mesham

மேஷ ராசிக்கு 4 ஆம் வீடான கடக ராசிக்கு பெயர்ச்சியாகியிருக்கும் செவ்வாய் கிரகத்தால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். சகோதர, சகோதரி வழியில் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தாய் வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். எடுக்கின்ற புதிய முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பிறருக்கு கொடுத்த கடன் திருப்பி வசூலிப்பதில் சிறு தடங்கல்கள் உண்டாகும். தொழில் விடயமான பயணங்களினால் பெரிய லாபம்கள் ஏதும் இருக்காது.

ரிஷபம்

- Advertisement -

rishabam

ரிஷபத்திற்கு 3 ஆம் வீடான கடக ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு உடல்நலம் நன்றாக இருக்கும். சகோதர வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். சராசரியான தனவரவுகளே இருக்கும். வயதில் மூத்தவர்களிடம் எதிலும் அனுசரித்து செல்வதே நல்லது. குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சற்று உடல் நிலை பாதிக்கக்கூடும். புதிய தொழில், வியாபார முயற்சிகளில் கடின உழைப்பின் மூலமே ஓரளவு லாபம் ஈட்ட முடியும்.

மிதுனம்

- Advertisement -

midhunam

மிதுன ராசியினருக்கு 2 ஆம் வீடான கடக ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியடைந்திருப்பதால் உற்றார் உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். திடீர் பணவரவுகள் ஏற்படும். நெடு நாட்களாக திருமணம் தள்ளிப்போன ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கைகூடும். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்களுக்கு விரும்பிய படியான வேலை கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் பாராட்டுகளும் விருதுகளும் பெறக்கூடிய அமைப்பு ஏற்படும். வெளிநாடுகளுக்கு பயணிக்க கூடிய யோகம் ஏற்படும்.

கடகம்

kadagam

கடக ராசியியிலேயே செவ்வாய் பகவான் பெயர்ச்சியடைவதால் ஒரு சிலர் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளால் அவதியுறக்கூடும். தாயாருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சலும் பொருள் நஷ்டமும் ஏற்படும். மாணவர்கள் சற்று கடின முயற்சியை மேற்கொண்டால் கல்வியில் சிறக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் எதிர்பாராத பணியிட மாற்றங்கள் கிடைக்கும். உறவினர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது.

சிம்மம்

simmam

சிம்ம ராசியினருக்கு 12 ஆம் வீடான கடக ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியடைந்திருப்பதால் தாய் வழியில் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவு ஏற்படும். கொடுக்கல், வாங்கல் சுமூகமாக இருக்கும். மாணவர்கள் கடினமாக முயற்சித்தால் மட்டுமே கல்வியில் சிறக்க முடியம். வெளிநபர்களிடம் பணம் சம்பந்தமான விஷயங்களில் சிறிது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கலைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பொருளும் புகழும் ஈட்டக்கூடிய சூழல் ஏற்படும்.

கன்னி

kanni

கன்னி ராசியினருக்கு 11 ஆம் இடமான கடக ராசிக்கு செவ்வாய் பெயர்ந்திருப்பதால் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும். ஒரு சிலர் ஆன்மிக தலங்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொள்வீர்கள்.சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின் தொடர்பால் உங்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாங்கிய கடன்கள் அனைத்தையும் வட்டியுடன் கட்டி முடிப்பீர்கள்.

துலாம்

thulam

துலாம் ராசியினருக்கு 10 ஆம் ராசியான கடக ராசிக்கு செவ்வாய் பெயர்ந்திருப்பதால் பெயர்ச்சியாவதால் உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபங்களே கிடைக்கும். எந்த ஒரு வேலையிலும் சற்று அலைச்சல் தாமதத்திற்கு பின்பே வெற்றி கிட்டும். பெண்களுக்கு சிறிது ஆரோக்கிய குறைவு ஏற்படும். பணியிடங்களில் பிறரிடம் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது.

விருச்சிகம்

virichigam

விருச்சிக ராசியினருக்கு 9 ஆம் ராசியான கடக ராசியில் செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று தாமதத்திற்கு பிறக்க வெற்றி கிடைக்கும். உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பூர்வீக நிலம் தொடர்பான வழக்குகள், பிரச்சனைகளில் இழுபறி நிலை நீடிக்கும். பிறருடன் கவனமாக பேசி பழகுவதால் வீண் வம்புகளை தவிர்க்கலாம். ஒரு சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும், அதை அடைக்க கூடிய பணஉதவிகளும் சீக்கிரத்திலேயே கிட்டும்.

தனுசு

dhanusu

தனுசு ராசியினருக்கு 8 ஆவது ராசியான கடக ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உடலாரோக்கியம் ஓரளவு நன்றாக இருக்கும். குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணியிடங்களில் உங்களுக்கு ஆகாத சிலர் உங்களுக்கு எதிராக சதி செய்யக்கூடும் என்பதால் எதிலும் சற்றும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் தொழில் கூட்டாளிகளின் சிறந்த செயல்பாடுகளினால் பெரும் தன லாபத்தை ஈட்டுவீர்கள்.

மகரம்

magaram

மகர ராசியினருக்கு 7 ஆம் ராசியான கடக ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். அனைத்திலும் கடின உழைப்பை தந்தால் மட்டுமே வெற்றி பெறும் நிலை உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றியுண்டாகும். குடும்பத்தின் எதிர்காலத்திற்காக ஒரு சிலர் கடன் வாங்க கூடும். விவசாயத் தொழிலில் இருப்போர்களுக்கு சுமாரான வருமானமே கிடைக்கும். புதிய முயற்சிகள் அனைத்தையும் சிறிது காலம் ஒத்தி வைப்பது நல்லது.

கும்பம்

kumbam

கும்ப ராசியினருக்கு 6 ஆம் ராசியான கடக ராசிக்கு செவ்வாய் பெயர்ந்திருப்பதால் கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் உருவாகும். புதிய வீடு, வாகனம் வாங்குவதில் தடைகள், தாமதங்கள் ஏற்படலாம். சகோதர வழி உறவுகளால் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும். பிறருடனான பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது. மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். சிலர் வாங்கிய கடனை அடைப்பதற்கு சிரமப்படவேண்டியிருக்கும். வாகனத்தில் செல்பவர்கள் கவனமுடன் பயணிப்பது அவசியம்.

மீனம்

meenam

மீன ராசியினருக்கு 5 ஆம் ராசியான கடக ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் நலத்தில் சிறிது பாதிப்புகள் ஏற்படலாம். பண வரவுகள் சுமாராக இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். தொழில், வியாபாரங்களில் பெருமளவு லாபங்கள் இல்லையென்றாலும் நஷ்டங்கள் ஏற்படாது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் சமூகமாக தீரும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சிலர் தொலை தூர ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் அமைப்பு உருவாகும்.

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sevvai peyarchi palangal june 2019 in Tamil. It is also called as chevvai peyarchi palangal in Tamil.

- Advertisement -