செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் மே 2019 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

sevvai
- Advertisement -

ரத்தம், போர், உடலின் வீரிய தன்மை ஆகிய அனைத்திற்கும் காரகனாக நவகிரகங்களில் செவ்வாய் பகவான் இருக்கிறார். இந்த செவ்வாய் பகவான் மே மாதம் 07 ஆம் தேதி அன்று காலை 07.19 மணிக்கு “ரிஷபம்” ராசியிலிருந்து “மிதுனம்” ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

- Advertisement -

Mesham Rasi

மேஷ ராசிக்கு 3 ஆம் இடமான மிதுனத்திற்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் நலம் சிறப்பாக இருக்கும் சகோதர, சகோதரிகளுடனான மனஸ்தாபங்கள் நீங்கும். அவர்களால் பொருளாதார நன்மைகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் நிலவி வந்த பிராச்சனைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சக போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள். மனோதைரியம் மிகும். சிலருக்கு ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் ஏற்படும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi

ரிஷப ராசிக்கு 2 ஆம் இடமான மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உடலாரோக்கியம் அவ்வப் போது பாதிக்கபடும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமணம் போன்ற சுப காரியங்கள் தாமதம் ஆகும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை நீடிக்கும். பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புண்டு.

மிதுனம்:

- Advertisement -

midhunam

மிதுன ராசிக்கு அதன் ராசியிலேயே செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் சிலர் வயிறு சம்பாந்தமான பிரச்சனைகளால் அவதியுறுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் வர வேண்டிய பணம் வந்து சேரும். தம்பதிகளுக்குள் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சுப காரிய முயற்சிகள் வெற்றி பெரும். நீண்ட காலமாக நீடித்து வந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

கடகம்:

Kadagam Rasi

கடக ராசிக்கு 12 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் நீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய முயற்சிகளிலும் தடை தாமதங்கள் உருவாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பர்களால் தனவரவு உண்டாகும். உடல் மற்றும் மனச்சோர்வு சிலருக்கு உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களுடன் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். சிலர் ஆன்மீக பயணம் மேற்கொள்ள நேரும்.

சிம்மம்:

simmam

சிம்ம ராசிக்கு 11 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் நலக் குறைபாடுகளும் அவ்வப்போது ஏற்பட்டு விலகும். பெயர்ச்சியாகியிருப்பதால் தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்க பெறுவார்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பியபடி பின்பு வேலை கிடைக்கும்.

கன்னி:

Kanni Rasi

கன்னி ராசிக்கு 10 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உங்களுக்கான பழைய கடன் பாக்கிகள் சற்று தாமதத்திற்கு பின்பு வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சிலருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபங்கள் இருக்கும். அரசியலில் இருப்பவர்கள் பதவிகள் கிடைக்க பெறுவார்கள்.

துலாம்:

Thulam Rasi

துலாம் ராசிக்கு 9 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உடலாரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். தன வரவுகளில் பிரச்சனைகள் ஏதும் இருக்காது. நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். புதிய முயற்சிகளில் தடைகள் பல ஏற்படும். சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான வியாதிகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள்ளாக பிரச்சனைகள் தோன்றலாம். பூர்வீக நிலம் சம்பந்தமான விவாகரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.

விருச்சிகம்:

virichigam

விருச்சிகம் ராசிக்கு 8 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். உங்களின் தொழில் வியாபாரகளில் சராசரியான லாபம் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் சிறிது தடங்கல்களுக்கு பிறகு வெற்றியடையும். சகோதர உறவுகளுடன் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பழைய கடன் பாக்கிகள் அனைத்தையும் கட்டி முடிக்கும் அமைப்பு உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசிக்கு 7 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். பிறருடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வழி உறவுகளால் நன்மை ஏற்படும். பெண்களுக்கு விரும்பிய காரியங்கள் நடைபெறும். புதிய காரிய முயற்சிகள் வெற்றி பெரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

மகரம்:

Magaram rasi

மகர ராசிக்கு 6 ஆம் ராசியான மிதுன ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். ஒரு சிலருக்கு கடன் வாங்கக்கூடிய சூழல் ஏற்படலாம். தொழில், வியாபாரங்களில் போட்டி அதிகமாகும். உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். பணவரவிற்கு குறைவு ஏற்படாது. உத்தியோகங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, பணியிடமாற்றம் சற்று தாமதமாகும்.

கும்பம்:

Kumbam Rasi

கும்ப ராசிக்கு 5 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் திருமண மற்றும் குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகக்கூடும். பிறரின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில், வியாபாரங்களில் சிறந்த லாபங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வார்கள். நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகள் கிடைக்கும் அமைப்பு உருவாகும்.

மீனம்:

meenam

மீனம் ராசிக்கு 4 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களுடன் சண்டை, மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் அனைத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மறைமுக எதிரிகள் உங்களுக்கெதிராக சதி செய்வார்கள். நீங்கள் பேசும் வார்த்தைகளில் கவனம் அவசியம் வேண்டும். பெண்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படும். சராசரியான வருமானம் இருக்கும். சிலருக்கு கடன் வாங்கும் அவசியம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
விகாரி ஆண்டில் அதிகம் நன்மை பெற போகும் ராசியினர் யார்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sevvai peyarchi palangal may 2019 in Tamil. It is also called as chevvai peyarchi palangal in Tamil.

- Advertisement -