நீங்கள் செய்த பாவம், உங்களை வாழ விடாமல் துரத்தித் துரத்தி அடிகின்றதா? பாவத்திற்கான விமோசனத்தை பெற, வியாழக்கிழமை பசுமாட்டிற்கு இந்த பொருளை தானமாகக் கொடுத்தாலே போதும்.

pasu

நம்முடைய வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பதற்கு காரணமாக இருப்பது நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகள் தான். பாவம் செய்தவர்கள் அதற்குண்டான தண்டனையிலிருந்து என்னாலும் தப்பித்துவிட முடியாது. என்னதான் பரிகாரத்தை செய்து வந்தாலும், அதற்குரிய தண்டனையை கட்டாயம் அனுபவித்து தான் ஆக வேண்டும். அதுதான் நியதியும் கூட. ஆனால் அந்த தண்டனையின் தாக்கத்தை குறைக்க, ஆன்மீக ரீதியாக நமக்கு பல பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நம் ஜாதக கட்டத்தில் உள்ள சுபகிரகங்கள் நமக்கு சுபமான பலனை கொடுக்கவில்லை என்றால், என்ன செய்வது?

sad

சுப கிரகங்கள் தங்களுடைய வேலைகளை சரியாக செய்யவில்லை என்றால், அசுப கிரகங்கள், சுப கிரகத்தோடு சேர்ந்து நம்மை ஆட்டிப்படைக்கிறது என்பதுதான் அர்த்தம். இதற்கெல்லாம் காரணம் நாம் செய்த பாவங்கள் தான். இதன் மூலம், பண கஷ்டம் ஏற்படும். மன கஷ்டம் ஏற்படும், நல்ல வேலை கிடைக்காது, நல்ல இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது, வாழ்க்கையில் இன்பம் இருக்காது முன்னேற்றம் இருக்காது. இப்படி பலவகையான பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்போம்.

சுப கிரகங்களான குரு பகவான், சுக்கிர பகவான், இவர்களோடு சேர்த்து மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற, நம்முடைய பாவத்தை குறைக்க, நாம் எந்த பொருளை பசுமாட்டிற்கு, எந்த கிழமையில் தானம் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்கு உரிய தினம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான்.

guru-bhagavan

குரு பார்க்க கோடி நன்மை ஏற்படும். குரு நம்மை பார்த்து விட்டால் மற்றவை அனைத்தும் நம்மை தேடி வரும். புதன்கிழமை அன்று குரு பகவானுக்கு உரிய வெள்ளை கொண்டைக்கடலையை தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் வியாழக்கிழமை அன்று அந்த கொண்டைக்கடலையை வேகவைத்து அரைத்து வெல்லம் சேர்த்து பசுமாட்டிற்கு சாப்பிட கொடுக்கலாம்.

- Advertisement -

வேகவைக்காமல் ஊரிய கொண்டைக்கடலையை, அரைத்து வெல்லம் சேர்த்து உருண்டை பிடித்தும் பசுமாட்டிற்கு உங்கள் கையாலேயே சாப்பிட கொடுக்கலாம். இந்த தானத்தை கொடுப்பதற்கு என்று ஒரு முறை உள்ளது. வியாழக்கிழமை காலை 6 லிருந்து 7 மணிக்கு அல்லது வியாழக்கிழமை மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் இந்த தானத்தை செய்வது நல்லது.

Kondai Kadalai

ஒரு வாழை இலையை வைத்து அரைத்த கொண்டை கடலை வெல்லம் சேர்ந்த கலவையை வைத்து, அதனுடன் ஒரு வாழைப்பழத்தை, முடிந்தால் ஒரு செவ்வாழை பழத்தை வைத்து பசு மாட்டிற்கு ஒரு விருந்து வைப்பது போல, பசுமாட்டை சாப்பிட செய்து விட்டாலே போதும் உங்கள் வாழ்நாளில் இருக்கும், உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் பல வகையான பிரச்சனைகளுக்கு விடிவு காலம் பிறந்து விடும்.

vellam

வாரம் ஒரு நாள் வியாழக்கிழமை தான் இதை நீங்கள் செய்ய வேண்டும். தொடர்ந்து ஆயுசுக்கும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். வாழ்க்கையில் தீராத கஷ்டங்களில் இருந்து விடுபட 48 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

pasu-agathikeerai

சிலரது ஜாதக கட்டம் யோகம் இல்லாமல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஜாதக கட்டம் சரியில்லாதவர்களுக்கு கூட தலையெழுத்தை மாற்ற கூடிய பரிகாரம் தான் இது. நல்லதே நினைப்பவர்களுக்கு நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.