குலதெய்வம் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு வீடுதேடி வந்து உங்களையும், உங்கள் வீட்டையும் பாதுகாக்கும். இதற்கு ஒரே 1 எலுமிச்சை பழம் போதும்.

amman
- Advertisement -

உண்மையான பக்தியோடு குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து, குலதெய்வத்தை வீட்டிற்கு அழைத்தால் நிச்சயம் நம் கூப்பிடும் குரலுக்கு, குலதெய்வம் நம் வீடு தேடி வரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமே கிடையாது. ஆனால் தினமும் நாம் குலதெய்வத்தை மனதார வேண்டி அழைப்பதில்லை. சில பேருக்கு, காலை இறை வழிபாடு செய்யும்போது குல தெய்வத்தின் பெயரை உச்சரித்து வழிபாடு செய்யும் பழக்கம் இருக்கும். சில பேர் குலதெய்வத்தை நினைவு கூறுவதற்கு மறந்திருப்பார்கள். தீராத கஷ்டங்கள், துயரங்கள் வரும்போதுதான் குலதெய்வத்தின் நினைவே இப்படிப்பட்டவர்களுக்கு வரும். அப்போது வேண்டி வேண்டி இறை வழிபாடு செய்வார்கள்.

kula-dheivam

ஆனால், அப்படியில்லை. சந்தோஷம் வரும்போதும் நம் குல தெய்வத்தை நினைவுபடுத்தி மனதார நன்றி சொல்வது நமக்கு பல நன்மைகளை அளிக்கும். உங்கள் வீட்டு குலதெய்வம் உங்களுடனும், உங்கள் வீட்டிலும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை காலை 4 மணியிலிருந்து 5 மணிக்குள் செய்ய வேண்டும். முடியாதவர்கள் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் செய்யலாம். கரும்புள்ளிகள் இல்லாத சுத்தமான ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு சுத்தபத்தமாக தலை ஸ்நானம் செய்துவிட்டு குலதெய்வத்தின் திருவுருவப் படத்தின் முன்பு செய்ய வேண்டும்.

praying-god1

ஒரு வீட்டில் நிச்சயம், அந்த குடும்பத்தினுடைய குலதெய்வத்தின் திரு உருவப்படமுமோ, சிலையோ இல்லாமல் இருக்கவே கூடாது. குலதெய்வத்திற்கு மண் அகல் தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு, வாங்கி வைத்திருக்கும் எலுமிச்சம்பழத்தை உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு மனைப் பலகையின் மீது அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை 3 முறை மனதார உச்சரித்த விட்டு, அதன் பின்பு ‘ஓம் பராசக்தி தேவியே ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தில் பராசக்தி என்னும் பெயருக்கு பதிலாக அந்த இடத்தில், உங்களுடைய வீட்டு குல தெய்வம் எதுவோ அந்த பெயரை நீங்கள் போட்டுக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை 11 முறையில் இருந்து உங்களால் எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறை உச்சரிக்கலாம். கணக்கு எதுவும் கிடையாது. ஒற்றைப்படையில் உச்சரித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை உங்கள் வீட்டு குலதெய்வத்திற்கு மல்லி புஷ்பத்தால் அலங்காரம் செய்வது மேலும் சிறப்பானது. 3 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜையை செய்ய வேண்டும்.

lemon1

மூன்று நாட்களும் ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை தான் உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை உச்சரித்து, அந்த எலுமிச்சை பழத்தில் உங்களது குல தெய்வத்தை ஆகர்ஷனம் செய்துகொள்ள வேண்டும். ஒரு நாள், பூஜை முடிந்தவுடன் ஒரு சிறிய தட்டின் மேல் அந்த எலுமிச்சம் பழத்தை வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். இறுதியாக 3வது நாள் பூஜையை முடித்துவிட்டு, அந்த எலுமிச்சை பழத்தை அறுத்து சாறு எடுத்து, இந்த பூஜையை செய்யும் குடும்பத் தலைவனாக இருந்தாலும் சரி, குடும்பத்தலைவியாக இருந்தாலும் சரி அந்த சாறை குடித்துவிட வேண்டும்.

- Advertisement -

temple-lemon

இந்த பூஜையைச் செய்வதன் மூலம், நிச்சயமாக உங்கள் குலதெய்வம் உங்களுடன் இருந்து உங்களையும் காக்கும் உங்கள் வீட்டில் குடிவந்து, உங்கள் குலத்தையும் காக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. குலதெய்வத்தை வரவழைப்பதற்கு ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள சுலபமான பரிகாரங்களில் இதுவும் ஒன்று. உங்களுடைய குல தெய்வம் உங்கள் வீட்டில் வாசம் செய்ய வேண்டும் என்றால் இந்த பரிகாரத்தை தாராளமாக எல்லோரும் செய்யலாம், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
மாங்கல்ய விருத்தி ஏற்பட வீட்டில் அன்றாட பூஜையை முடித்ததும் இப்படி செய்து பாருங்கள்! கணவருக்கு தீர்க்காயுள் கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -