இதுவே எங்களது சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் ஆட்டநாயகன் விருது பெற்ற – முகமது ஷமி பேட்டி

mohammed-shami

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அணி குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

sami

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி துவக்கம் முதலே சரிவை சந்தித்தது. துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 64 ரன்களை அடித்து ஆறுதல் அளித்தார். பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக நடையை கட்ட நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

பிறகு இந்திய அணி 158ரன்களை அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தவான் 75ரன்கள் மற்றும் கோலி 45ரன்களும் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். போட்டியின் முடிவில் ஆட்டநாயகனாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டார். பிறகு அவர் பேசுகையில் : இந்த வெற்றி மட்டுமில்லாமல் இதுவரை நாங்கள் பெற்ற அனைத்து வெற்றிகளும் முழு டீமுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

shami

மேலும், காயம் காரணமாக என் உடலில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டது. எனது பந்துவீச்சில் எந்த மாற்றமும் இல்லாமல் நான் சிறப்பாக பந்துவீச எனது அணியின் பயிற்சியாளர்களுக்கும் மற்றும் அணியின் கேப்டன் மற்றும் உதவி வீரர்கள் என அனைவரும் காரணம். மேலும் என்மீது நம்பிக்கை வைத்த அனைவர்க்கும் நன்றி. உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்த தொடர் நமக்கு சிறந்த ஒன்றாக அமையும் என்று ஷமி கூறினார்.

இதையும் படிக்கலாமே :

நியூஸிலாந்திலும் கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த அசத்திய தல தோனி – வைரல் வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்