நியூஸிலாந்திலும் கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த அசத்திய தல தோனி – வைரல் வீடியோ

Dhoni

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அணி குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

shami

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி துவக்கம் முதலே சரிவை சந்தித்தது. துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 64 ரன்களை அடித்து ஆறுதல் அளித்தார். பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக நடையை கட்ட நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனி நியூசிலாந்து வீரரான பெர்குசனை தனது மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றினார். இந்த வயதிலும் இவரது வேகம் மற்றும் திறமை வியக்கவைக்கும் ஒன்றாக உள்ளது. இந்த ஸ்டம்பிங் வீடியோ இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ உங்களுக்காக அந்த வீடியோ இணைப்பு :

உலக அளவில் தோனியை போன்ற விக்கெட் கீப்பர் தற்போது இல்லை என்பதே உண்மை. கிரிக்கெட் வரலாற்றில் தோனி நிச்சயம் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் என்பது இவரது சாதனைகள் மூலம் நாம் அறிந்ததே. இருப்பினும், அடுத்து வரும் இளம் வீரர்களுக்கு தோனியின் ஆட்டங்கள் ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே :

இந்தியா வெற்றிபெறும் தருவாயில் பாதியில் நிறுத்தப்பட்ட நியூஸி ஒருநாள் போட்டி – காரணம் இதுதான்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்