புல்வாமா தாக்குதல் : முகமது ஷமி அளிக்க இருக்கும் பெரிய அளவிலான நிதியுதவி – 44 குடும்பங்களுக்கும் சென்றடைய திட்டம்

shami

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.

pulwama

நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர். சேவாக் போன்று கல்வி சம்மந்தப்பட்ட உதவியினை வழங்க முன்வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார்.

அதன்படி பாதிக்கப்பட்ட 44குடும்பத்தினருக்கும் நிதியுதவி செய்யும் பொருட்டு 5 லட்சம் வீதம் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க முடிவெடுத்துள்ளார். மேலும், முடிந்தவரை அனைவரும் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினருக்கு உதவும் வகையில் நன்கொடை அளிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

mohammed-shami

தொடர்ந்து இந்திய அணி வீரர்களும், நிவாகமும் தங்களது பங்களிப்பை அளித்துவரும் நிலையில் வேகபந்து வீச்சாளரான ஷமியும் நிதி அளிக்க முன்வந்துள்ளது குறிபிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

தல தோனியின் சிறப்பு பற்றி தெரியவேண்டுமா ? ஸ்டம்பிங், ரிவியூ,கேட்ச் மற்றும் ரன்அவுட் என புத்திசாலித்தனமான 100 விக்கெட்டுகள் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்