தொடர்ந்து இரு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி என்று அசத்திய வில்லியம்சன் அடுத்த பந்திலே அவரை தூக்கிய இந்திய பந்துவீச்சாளர் – வீடியோ

williamson

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் 50 ஓவர்கள் முடிவில் 324 ரன்களை குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் 87 ரன்களையும் தவான் 66 ரன்களையும் குவித்து சிறப்பான துவக்கத்தினை அளித்தனர்.

dhoni

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் களமிறங்கினர். குப்தில் 15 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் வெளியேறினார். முன்ரோ 31 ரன்களில் வெளியேறினார். அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.

களமிறங்கியதிலிருந்து அதிரடியாக விளையாட துவங்கினார் வில்லியம்சன். இந்திய அணியின் பந்துவீச்சாளரான முகமது ஷமி 8ஆவது ஓவரை வீசவந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் இரண்டாவது பந்து சிக்ஸர் மூன்றாவது பந்து பவுண்டரி என 4 பந்துகளில் 18 ரன்களை குவித்தார். ஆனால், தனது திறமையான பந்துவீச்சில் மூலம் அடுத்த பந்திலேயே ஷமி வில்லியம்சனை போல்ட் ஆக்கி வெளியேற்றினார். இதோ உங்களுக்காக அந்த வீடியோ இணைப்பு :

நியூசிலாந்து அணி தற்போதுவரை 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை அடித்துள்ளது. இன்னும் அவர்களுடைய வெற்றிக்கு 191 ரன்கள் தேவை என்ற நிலையில் தொடர்ந்து ஆடிவருகிறது.

இதையும் படிக்கலாமே :

சர்வதேச போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த நியூசி வீரர் – சாதனை விவரம் இதோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்