சர்வதேச போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த நியூசி வீரர் – சாதனை விவரம் இதோ

boult

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் 50 ஓவர்கள் முடிவில் 324 ரன்களை குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் 87 ரன்களையும் தவான் 66 ரன்களையும் குவித்து சிறப்பான துவக்கத்தினை அளித்தனர்.

dhoni

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ட்ரெண்ட் போல்ட் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் தவான் ஆகியோரது விக்கெட்டினை வீழ்த்தினார். இவர் தவானின் விக்கெட்டை வீழ்த்தும்போது சர்வதேச போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி பூர்த்தி செய்தார். 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இவர் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 73 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள போல்ட் 131 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் . மேலும், 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 233 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 25 டி20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மொத்தமாக அவர் இந்த போட்டிவரை 401 சர்வதேச விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

trent boult

ஒருநாள் போட்டியில் இவரது சிறந்த பந்துவீச்சாக 34 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 30 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்தியது இவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது.

இதையும் படிக்கலாமே :

கோலியின் விக்கெட்டை வீழ்த்துவேன் என்று கூறிய நியூசி பந்துவீச்சாளரை கிழித்து எடுத்த தோனி மற்றும் ஜாதவ் – விவரம் உள்ளே

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்