நியூசிலாந்தை சுருட்டி போட்ட இந்தியஅணி பந்துவீச்சாளர்கள். 200ரன்களை கூட அடிக்கமுடியாமல் நியூசிலாந்து ஆல்அவுட்

indian-team

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேப்பியரில் துவங்கி நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி குப்தில் மற்றும் முன்னரோ ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

ind vs nz trophy

ஆனால், இந்த ஜோடி சிறப்பான துவக்கத்திற்கு அடித்தளம் அமைக்கவில்லை. இந்திய அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது சாமி இருவரையும் க்ளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். அவரகள் முறையே 5,8 ரங்களில் ஆட்டம் இழந்தனர்.

பிறகு ஆடிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய வண்ணம் இருந்தனர். ஆனால், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் பொறுப்பாக ஆடி 64 ரன்கள் எடுத்து குலதீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

shami

பிறகு ஆடிய அணைத்து வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து வெளியேறி 157ரங்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இந்திய அணி சார்பாக குலதீப் 4 விக்கெட்டுகளையும் ஷமி 3விக்கெட்டுகளையும் சாஹல் 2விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இந்திய அணி 158ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய மண்ணை தொடர்ந்து இந்திய அணிக்கு நியூசிலாந்தில் கிடைத்த வரவேற்பு – ஆக்லாந்து ஏர்போர்ட் வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்