பே ஓவல் ஒருநாள் போட்டியின் ஆட்டநாயகன் ஷமி இங்கிலீஷ் பேசியதை பார்த்து கலாய்த்த நிகழ்ச்சி தொகுப்பாளர், அதை கண்டு சிரித்த கோலி – வீடியோ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் நடந்தது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் அணி முடிவெடுத்து அதன்படி களமிறங்கியது நியூசிலாந்து அணி விளையாடி 243 ரன்களை குவித்தது. அந்த அணியில் டெய்லர் 93 ரன்கள் அதிகபட்சமாக குவித்தார்.

shami

அடுத்து ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. ரோஹித் 62 ரன்களும், கேப்டன் கோலி 60 ரன்கள் அடித்தனர். கார்த்திக் மற்றும் ராயுடு ஆகியோர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

பின்னர் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் தொகுப்பாளர் இங்கிலீஷில் கேள்விகளை கேட்டார். ஆங்கிலம் கொஞ்சம் குறைவாகவே பேச தெரிந்த ஷமி சிறிது யோசித்து யோசித்து சரியாக பேசினார். இதை கண்டா நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களது இங்கிலிஷ் பகுத் அச்சா என்று ஹிந்தியில் கிண்டல் செய்து ஜாலியாக சிரித்தார். இதை பார்த்த கேப்டன் கோலியும் சிரித்தார். இதோ அந்த வீடியோ இணைப்பு உங்களுக்காக :

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கிடையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள கேப்டன் கோலி அணியில் இருந்து விடைபெற்றார்.

இதையும் படிக்கலாமே :

இந்த தோல்வி எங்களுக்கு பாடத்தை கற்றுக்கொடுத்தது. நாங்கள் இதை செய்திருந்தால் இந்திய அணியை வீழ்த்தி இருக்க முடியும் – வில்லியம்சன்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்