இந்த தோல்வி எங்களுக்கு பாடத்தை கற்றுக்கொடுத்தது. நாங்கள் இதை செய்திருந்தால் இந்திய அணியை வீழ்த்தி இருக்க முடியும் – வில்லியம்சன்

kane-williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் நடந்தது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது நியூசிலாந்து அணி அதன்படி விளையாடி 243 ரன்களை குவித்தது. அந்த அணியில் டெய்லர் 93 ரன்கள் அதிகபட்சமாக குவித்தார்.

ind vs nz trophy

அடுத்து ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. ரோஹித் 62 ரன்களும், கேப்டன் கோலி 60 ரன்கள் அடித்தனர். கார்த்திக் மற்றும் ராயுடு ஆகியோர் அடித்தனர். பாதைக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

- Advertisement -

பின்னர் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது : இந்த தோல்வியின் மூலம் இந்திய அணியினர் எங்களுக்கு பாடம் புகுத்தி உள்ளனர். எங்கள் அணியில் டெய்லர் மற்றும் லேதம் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். கடந்த இரண்டு போட்டிகளை காட்டிலும் இந்த போட்டியில் நாங்கள் எங்களது தவறுகளை திருத்திக்கொண்டு சிறப்பாக ஆடியதாகவே கருதுகிறோம்.

boult

மேலும் இந்த போட்டியில் எங்கள் பவுலர்கள் சிறப்பாகவே பந்துவீசினர். ஆனால், முக்கியமான நேரத்தில் விக்கெட் எடுக்க தவறிவிட்டனர். ஒருவேளை சரியான இடைவெளியில் விக்கெட்டை எடுத்திருந்தால் எங்களது அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். இனிவரும் போட்டிகளில் அதனை சரிசெய்து வெற்றிபெற முயற்சிப்போம் என்று வில்லியம்சன் கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

எனக்கு பந்துவீச மிகவும் கடினமாக இருந்தது. அதன் காரணம் இதுதான் – ஆட்டநாயகன் ஷமி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -