எனக்கு பந்துவீச மிகவும் கடினமாக இருந்தது. அதன் காரணம் இதுதான் – ஆட்டநாயகன் ஷமி

shami

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் நடந்தது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் அணி முடிவெடுத்து களமிறங்கியது நியூசிலாந்து அணி அதன்படி விளையாடி 243 ரன்களை குவித்தது. அந்த அணியில் டெய்லர் 93 ரன்கள் அதிகபட்சமாக குவித்தார்.

அடுத்து ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. ரோஹித் 62 ரன்களும், கேப்டன் கோலி 60 ரன்கள் அடித்தனர். கார்த்திக் மற்றும் ராயுடு ஆகியோர் அணியினைவெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

பிறகு பேசிய ஆட்டநாயகன் ஷமி : இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். மேலும்,அடுத்தடுத்து தொடர்களை கைப்பற்றுவது அணியாக எங்களது அணியை பலமடைய வைத்திருக்கிறது. இன்றைய போட்டியில் நான் பந்துவீச மிகவும் சிரமப்பட்டேன். அதன் காரணம் இங்கு காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.

mohammed-shami

அதன் காரணமாக நான் நினைத்த இடத்தில் என்னால் பந்துவீச முடியவில்லை. பந்துகள் காற்றில் அலைந்து வேறு இடத்தில் பிட்ச் ஆனது இதனால் மிகவும் சிரமப்பட்டு பந்துகளை சரியான இடத்தில் வீசினேன். அதனால் எனக்கு விக்கெட் கிடைத்தது. தொடர்ந்து எனது பந்துவீச்சு சிறப்பாக உள்ளது எனக்கு மகிழ்ச்சியே என்று முகமது ஷமி தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

அடுத்த இரு போட்டிகளுக்கு என் இடத்தில் இவரே இறங்க வேண்டும். என்னை விட மிகவும் திறமை வாய்ந்தவர் இவர்தான் – கிங் கோலி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்