சண்முக கடவுள் 108 போற்றி

Murugan-compressed

நாம் வாழும் இந்த உலகம் மிகப்பெரியது. இவ்வுலகத்தையே நாம் சுற்றி வந்தாலும் நாம் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு தங்குமிடத்தில் வசிக்க வேண்டியிருக்கிறது. அந்த வசிப்பிடத்திற்கு வீடு அல்லது இல்லம் என்று பெயர். இன்று பலரும் பொருளாதார சூழ்நிலை காரணமாக சொந்த வீட்டை கட்ட முடியாமலும், தங்களுக்கென்று சொந்தமாக சிறிது நிலம் கூட இல்லாமல் இருக்கின்றனர். இப்படி சொந்த வீடு மற்றும் நிலம் இல்லாமல் எங்கும் மக்களின் விருப்பத்தை தீர்க்கும் “சண்முக கடவுள்” போற்றி துதி இதோ.

kantha sasti kavasam lyrics

சண்முக கடவுள் போற்றி

ஓம் அழகா போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அயன்மால் மருகா போற்றி
ஓம் சக்திவேலவா சரவணா போற்றி

ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
ஓம் பன்னிருகை வேலவா போற்றி
ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி
ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி

ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடர் களைவோனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி

ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஓம்கார சொருபனே போற்றி
ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி

- Advertisement -

ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி

ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி
ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி

ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி
ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி

ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி
ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி
ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
ஓம் ஏழாவதுபடை விடுடையவா போற்றி

kantha sasti kavasam lyrics

ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி
ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் மருதமலை இறைவா போற்றி

ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி

ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி
ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி
ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி

ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி
ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி

ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ சண்முகா போற்றி
ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி

ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி

ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
ஓம் யோக சித்தியே அழகே போற்றி
ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி
ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி

kantha sasti kavasam lyrics

ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி
ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி

ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி
ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி

ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி
ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
ஓம் துதிபுரி அன்ªபன் துணையே போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி

ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி
ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி
ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி

ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
ஓம் மருதமலை ஆண்டவா போற்றி
ஓம் போற்றி… போற்றி… சண்முகா போற்றி

kantha sasti kavasam lyrics

சண்முகநாதராகிய முருக பெருமானை போற்றும் 108 போற்றி துதி இது. செவ்வாய் கிழமை, மாதந்தோறும் வரும் கந்த சஷ்டி, கிருத்திகை நட்சத்திர தினங்களில் காலை அல்லது மாலை வேளையில் முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று, அவருக்கு தீபாராதனை காட்டும் போது இத்துதிகளை வாய்விட்டு சத்தமாகவோ அல்லது மனதிற்குள்ளோ ஜெபிக்க வேண்டும். இதனால் சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அவற்றை பெறும் யோகம் உண்டாகும். அசையா சொத்துக்கள் சம்பந்தமாக இருக்கும் பிரச்சனை நீங்கும்.

kantha sasti kavasam lyrics

மனிதர்கள் வசிப்பதற்கு வீடு மிகவும் அவசியமாகும். என்ன தான் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தாலும், சொந்த வீட்டில் மனமகிழ்ச்சியையும், நிம்மதியையும் வாடகை வீட்டில் வசிப்போர்களுக்கு ஏற்படுவதில்லை. அதுபோல் உணவை உற்பத்தி செய்யும் விவசாய தொழிலுக்கும், நமது வருங்கால சந்ததியினருக்கு சொத்தாகவும் சிறிதளவு நிலமாவது நமக்கு சொந்தமாக இருப்பது சிறந்தது. பூமிகாரகனாகிய செவ்வாய் பகவானின் தன்மை கொண்டவர் சண்முக கடவுளாகிய முருகப்பெருமான். அவரின் இந்த துதியை படித்து வருவதால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே:
காரிய தடை நீக்கும் விநாயகர் துதி

இது போன்று மேலும் பல மந்திரங்கள், ஜோதிட குறிப்புக்கள் என பலவற்றை அறிய எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
Here we have Shanmuga kadavul potri in Tamil. This is also called as Murugan 108 potri in Tamil or Shanmuga kadavul potri lyrics in Tamil