காரிய தடை நீக்கும் விநாயகர் துதி

Pillayar-1

நமக்கு சில காரியங்கள் கால தாமதமாக நடந்தாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு சில நல்ல காரியங்கள் விரைவாக நடக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதில் நாம் என்ன தான் சரியாக இருந்தாலும் நமக்கு நடக்க வேண்டிய அந்த நல்ல காரியம் மட்டும் பல தடங்கல்கள் மற்றும் கால தாமதங்கள் ஆகி கொண்டே இருக்கும். எப்படிப்பட்ட தடங்கல்கள் மற்றும் தாமதங்களையும் நீக்குபவர் விநாயக பெருமான். அவரை போற்றி இயற்றப்பட்ட துதி பாடல் இது.

Pillayar

விநாயகர் துதி

பிடியதனுருவுமை கௌமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடுமவரிடர்
கடி கணபதிவர அருளினன் முகுகொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.

வினைகள் அனைத்தையும் கலைபவர் விநாயகர். அவரை போற்றும் இத்துதியை தினமும் காலையில் பிற மந்திரங்கள் கூறி ஜெபிக்கும் முன்பு இந்த துதியை மூன்று முறை மனதார கூறி வழிபடுவது சிறப்பு. இதை தினந்தோறும் துதித்து வரும் போது உங்களுக்கு நீண்ட நாட்களாக தடங்கல் ஏற்பட்டு தள்ளிப்போகும் அல்லது தாமதம் ஆகும் காரியங்கள், இடர்கள் நீங்கி விரைவாக காரியங்கள் நல்ல முறையில் நடக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

Pillayar

விநாயகப்பெருமான் ஓம் என்ற பிரணவ மந்திரம் நிறைந்திருக்கும், சிவபெருமானின் புதல்வர் மற்றும் ஓம்காரத்தின் வடிவம் ஆவார். புராணங்களின் படி சனீஸ்வர பகவானின் சனிபார்வைக்கு தெய்வங்கள் கூட தப்ப முடியவில்லை. இந்த சனிபகவான் விநாயகப்பெருமானையும் பீடிக்க நினைத்து ஒவ்வொரு நாளும் விநாயகரை பிடிக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் தனது கடமையிலிருந்து தவறாத, காலத்தை விட வேகமாக இருந்த விநாயகரை பிடிக்க முடியாமல் தோற்று, விநாயகரை வணங்கி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு அவரிடம் ஆசிகள் பெற்றார் சனிபகவான். இப்படி பல சிறப்புக்கள் மிக்க விநாயகரை தொழுவதன் மூலம் நமது கடமைகள் அனைத்தும் தடையின்றி நடக்கும்.

இதையும் படிக்கலாமே:
பலன்கள் பல தரும் நாராயண ஸ்தோத்திரம்

இது போன்ற மேலும் பல மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள், ஆன்மீக தகவல்கள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vinayagar thuthi in Tamil. It is also called as Pillayar thuthi in Tamil or Lord Ganesh thuthi in Tamil. This is a powerful mantra of Lord Ganesh in Tamil.